26
Jul 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
தவெக ஆட்சி கவிழ்ப்புக்கு அட்வான்ஸ் - பதுக்கிய 2 கோடி சிக்கியது
BY NEWS TODAY
24 Jul 2026
0
பகிர்

தமிழக வெற்றி கழக ஆட்சியை கவிழ்க்க ஆளும்கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க பேரம் நடத்தியதாக ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ. இளையராஜா கொடுத்த புகாரின் பேரில் யூடியூபர் திருநாவுக்கரசு மற்றும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் கூட்டாளிகளான கரூரைச் சேர்ந்த ரமேஷ், மதன் உள்ளிட்ட 14 பேரை திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்தனர். சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரும்போது ஆளும்கட்சியை சேர்ந்த 10 எம்.எல்.ஏ.க்கள் இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக ஓட்டளிக்க தலா 35 கோடி ருபாய் முதல் 50 கோடி ருபாய் வரை ரொக்கமாக தர தயாராக இருப்பதாக திருநாவுக்கரசு மற்றும் சில பிரபல பத்திரிக்கையாளர்கள் மூலம் பேரம் பேசப்பட்டது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இதற்காக யூடியூபர் திருநாவுக்கரசு, பிரபல பத்திரிக்கையாளர்களுக்கு கமிஷன் தொகையாக ஒரு எம்.எல்.ஏ.வுக்கு தலா 2 கோடி வரை தருவதாக செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் பேரம் பேசியதாக கூறப்படுகிறது.


திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் பேரம் பேசிய வழக்கில் எம்.எல்.ஏ.க்களுக்கும், தூதுசென்ற பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்டோருக்கு அட்வான்ஸ் தொகையாக கொடுக்க பல்வேறு தனியார் நிதி நிறுவனங்களில் ஆயிரம் கோடிக்கு மேல் பதுக்கப்பட்டிருப்பதாக போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் பேரில் கரூரில் உள்ள தனியார் நிதி நிறுவனம் உள்ளிட்ட 3 நிதி நிறுவனங்களுக்கு போலீசார் சீல் வைத்துள்ளனர். மேலும் சென்னை சூளைமேட்டில் உள்ள தீபம் நிதி நிறுவனத்தில் இளையராஜா எம்.எல்.ஏ.வு.க்கு கொடுக்க பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 கோடியே 82 லட்சம் ருபாய் ரொக்க பணத்தையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர். 

நிதி நிறுவனத்தை நடத்தி வரும் கருணாநிதி, சரவணன் ஆகிய இருவரையும் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதேபோல கரூர் அருகேயுள்ள சின்ன ஆண்டாங்கோயில் பாரி நகரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவராக கருதப்படும் நிதி நிறுவன அதிபர் கனகராஜ் நடத்தி வரும் நிதி நிறுவனம், கும்பகோணம் மோதிலால் தெருவில் உள்ள கொங்கு தனியார் நிதி நிறுவனத்திலும் போலீசார் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர். போலீசார் சோதனை செய்வது அறிந்து இங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல கோடி பணத்தையும் இந்த கும்பல் அப்புறப்படுத்தி விட்டதும் தெரியவந்துள்ளது.

இதன்மூலம் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்திருப்பதும், கருப்பு பணத்தை பதுக்கி வைத்து ஆட்சியை கவிழ்க்க திமுக மேலிடம் திட்டம் வகுத்து கொடுத்திருப்பதும் வெட்ட வெளிச்சம் ஆகி உள்ளது. அமலாக்கத்துறை இது தொடர்பான ஆவணங்களை சென்னை மாநகர போலீசாரிடம் இருந்து பெற்று விசாரணை நடத்தி வரும் வேளையில் தனியார் நிதி நிறுவனங்களில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பல நூறு கோடி ருபாய் ரொக்கப்பணத்தை சென்னை மாநகர போலீசார் தேடிவருகின்றனர் . 

ஆட்சியை எப்படியாவது கவிழ்த்துவிட வேண்டும் என திமுக வாரிசு உறுப்பினர் பிறப்பித்த உத்தரவால் தற்போது திமுக மேலிடமே சிக்கலில் மாட்டிக்கொண்டதாக திமுக பிரமுகர்கள் புலம்பி தவிக்கின்றனர்.


 

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்