26
Jul 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
ஆகஸ்ட் 1 முதல் திருப்பதி கோயில் புஷ்கரணி குளத்தில் நீராடத் தடை:
BY NEWS TODAY
25 Jul 2026
0
பகிர்

திருமலை: திருமலையில் ஏழுமலையான் கோயிலின் வடக்கே மிகவும் புனிதமாக கருதப்படும் சுவாமி புஷ்கரணி எனும் குளம் உள்ளது. இந்தக் குளத்தில் (சுவாமி புஷ்கரணி) ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை பக்தர்கள் நீராட திருமலை திருப்பதி தேவஸ்தானம் தடை விதித்துள்ளது.

இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வருடாந்திர பிரம்மோற்சவம், அக்டோபர் மாதத்தில் நவராத்திரி பிரம்மோற்சவம் என இரண்டு பிரம்மோற்சவம் நடைபெற உள்ளன. இதனையொட்டி, ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் கோயில் குளத்தில் பராமரிப்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இதனைத்தொடர்ந்து, செப்டம்பர் 1-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை குளத்தில் மீண்டும் தூய்மையான தண்ணீர் நிரப்பும் பணிகள் நடைபெறும். எனவே, ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் செப்டம்பர் 10-ம் தேதி வரை பக்தர்கள் கோயில் குளத்தில் நீராட முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

.


----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்