25
May 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
தென்காசியில் வேன் கவிழ்ந்து ஐயப்ப பக்தர்கள் 2 பேர் பலி
BY NEWS TODAY
16 Jan 2026
0
பகிர்

தென்காசியில் ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.



தென்காசி மாவட்டம்,  சிவகிரி அருகே ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் இன்று(ஜனவரி 16) கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதையறிந்த போலீஸார் மற்றும் மீட்பு பணியினர் விரைந்து வந்து வேனில் இருந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



இந்த விபத்தில் சென்னையைச் சேர்ந்த வேன் டிரைவர் குருமூர்த்தி (33) மற்றும் சத்தியமூர்த்தி (34) ஆகியோர் உயிரிழந்தனர். வேன்  விபத்தில் காயமடைந்த 6 குழந்தைகள் உள்பட 12 பேர் சிகிச்சைக்காக சிவகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


----------------------
ஆசிரியர் NEWS TODAY
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்