திருவள்ளுவர் தினத்தில் மு.க.ஸ்டாலின் தந்த 4 வாக்குறுதிகள்
BY NEWS TODAY
16 Jan 2026
0
பகிர்

திருவள்ளுவர் தினமான இன்று (ஜனவரி 16) தமிழக  மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 வாக்குறுதிகளை அளித்துள்ளார்.



ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் ஒரு பகுதியாக, தை மாதத்தின் இரண்டாம் நாள் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் இது திருவள்ளுவரின் வாழ்வியல் நெறிகளைப் போற்றும் வகையில் திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்படுகிறது.  இந்த தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப்பக்கத்தில் ஒரு அறிக்கையில்,  " வான்புகழ் வள்ளுவரைப் போற்றும் இந்த திருவள்ளுவர் நாளில், தமிழ்நாட்டு மக்களுக்கு நான் நான்கு முக்கிய வாக்குறுதிகளை அளிக்கிறேன். அஞ்சாமை மனிதநேயம் அறிவாற்றல் ஊக்கமளித்தல் – வள்ளுவன் சொன்ன இவை நான்கும் நமது ஆட்சியின் அடிநாதம்.



அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தர்க் கியல்பு- திருவள்ளுவர்



சமூக நீதி மற்றும் மதவாத சக்திகளுக்கு எதிராகப் போராடும் துணிச்சல், வறியோர் எளியோர் வாழ்வுயர மனிதநேயத் திட்டங்கள், இளைய சமூகத்தின் அறிவாற்றலை வளர்க்கும் முன்னெடுப்புகள், தொழில் வளர்ச்சிக்கும், மகளிர் மேம்பாட்டிற்கும் ஊக்கமளிக்கும் ஆக்கப் பணிகள். இவை நான்கும் தமிழ்நாட்டில் தொடரும் என்பது இந்த திருவள்ளுவர் தினத்தில் உங்களுக்கு நான் தரும் வாக்குறுதி" என்று தெரிவித்துள்ளார்.


----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்