02
Mar 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பிரதமர் மோடி தரிசனம் செய்கிறார்.
BY NEWS TODAY
26 Feb 2026
0
பகிர்

 திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பிரதமர் மோடி தரிசனம் செய்கிறார். 


 மார்ச் 1ஆம் தேதி மதுரை வரும் மோடி.



 மதுரை மண்டேலா நகரில் உள்ள திடலில் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது. 

 முன்னதாக பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு அரசு விழாவும் நடைபெறுகிறது.

 இதில் பங்கேற்பதற்காக 28ஆம் தேதி அகமதாபாத் நகரில் இருந்து விமான மூலம் சென்னை வருகிறார். அன்று இரவு சென்னை ராஜ் பவனில் தங்கிவிட்டு மறுநாள் காலை ஹெலிகாப்டர் மூலம் பாண்டிச்சேரி மற்றும் தஞ்சாவூர் செல்கிறார்.

 அதன் பிறகு தஞ்சாவூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மதியம் 2:50 மணிக்கு மதுரை வருகிறார்.

 விமான நிலையம் அருகே பல்வேறு அரசு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

 பின்னர் கார் மூலம் நான்கு மணிக்கு திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு செல்கிறார்.

 அங்கு சிறப்பு பூஜை, தரிசனம் முடித்துவிட்டு மண்டேலா நகர் பொதுக்கூட்ட மேடைக்கு வருகிறார்.

 தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு பின்னர் இரவு 6.50 மணிக்கு விமான மூலம் டெல்லி செல்கிறார்.

 திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான பிரச்சனை முடிவுக்கு வந்த நிலையில் பிரதமர் மோடி திருப்பரங்குன்றம் கோயிலுக்கு வருகை தருவது முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

 இதையொட்டி பிரதமர் மோடியின் சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகள், மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் உட்பட அதிகாரிகள் திருப்பரங்குன்றம் கோயிலுக்கு சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்து வருகின்றனர்.



----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்