திமுக தங்கள் குடும்பத்துக்காக திட்டங்களை தீட்டுவார்கள்
BY NEWS TODAY
14 Apr 2026
0
பகிர்

திமுக தங்கள் குடும்பத்துக்காக திட்டங்களை தீட்டுவார்கள். 

 மதுரையில் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு


திருமங்கலம் வேட்பாளர் ஆர் பி உதயகுமாரை ஆதரித்து செக்கானூரணியில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, 


பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், மூக்கையா தேவர் மக்கள் மனதில் வாழும் தலைவர்கள். இந்த மண்ணில் பேசுவதை நான் பெருமையாக கருதுகிறேன்.


அதிமுகவை பொறுத்தவரை மக்களுக்காக தொடங்கப்பட்ட கட்சியாகும். திமுக குடும்பத்துக்காக தொடங்கப்பட்ட கட்சி ஆகும். மக்களுக்கு என்ன தேவைகளை என்பதை திட்டங்கள் போட்டு மக்களிடத்தில் சேர்ப்போம். ஆனால் திமுக தங்கள் குடும்பத்துக்காக திட்டங்களை போடுவார்கள். இதுதான் திமுகவிற்கும், அதிமுகவிற்கும் உள்ள வேறுபாடு. 

தீய சக்தி திமுகவை வேரோடு அழிக்க வேண்டும் என்ற தலைவர்களின் சபதத்தை நாம் நிறைவேற்ற வேண்டும். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு நாம் தான் பிள்ளைகள்.

நாட்டு மக்களுக்காக வாழ்ந்தவர்கள் இந்த இருபெரும் தலைவர்கள். ஆனால் தன் குடும்பத்திற்காக வாழ்ந்தவர் கருணாநிதி. 


இந்த இயக்கத்தை உடைக்க முயன்ற போது பொதுமக்கள் , கழக நிர்வாகிகள் ஆகியோரின் துணையோடு தூள் தூளாக்கினோம். இன்றைக்கு அதிமுக புதுப்பொலிவுடன் தேர்தலை சந்தித்து வருகிறது.


நம் கூட்டணி இயற்கையான கூட்டணி வெற்றி கூட்டணி 234 தொகுதிகளில் 210 தொகுதியில் தனி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும். இன்றைக்கு சாலைகள் , கல்லூரிகள், பாலங்கள், பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை திறந்தோம். பள்ளிக்கூடத்தை திறந்தது அதிமுக, பள்ளிக்கூடத்தை மூடியது திமுக.

போதை பொருள் சர்வ சாதாரணமாக உள்ளது நிச்சயம் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் கஞ்சாவை அடியோடு நிச்சயமாக ஒழிப்போம் .

வருகிற தேர்தலில் திருமங்கலம் வேட்பாளர் உதயகுமாருக்கு இரட்டை இலையில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று பேசினார் .

முன்னதாக ஆர் பி உதயகுமார் எடப்பாடிக்கு வெள்ளி வேல் வழங்கினார்.

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்