நக்கீரன் கோபாலுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம்
BY NEWS TODAY
10 Apr 2026
0
பகிர்

நக்கீரன் கோபாலுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம்

பெங்களூர் நீதிமன்றம் உத்தரவு.


நக்கீரன் பத்திரிகையில், செய்தியாளராக பணியாற்றி வந்தவர் சிவசுப்பிரமணியம்.

1993ஆம் ஆண்டு, சந்தன கடத்தல் வீரப்பனை நேரில் சந்தித்து பேட்டியும், புகைப்படமும் எடுத்து வெளியிட்டவர். இவர் 2018 ஆம் ஆண்டு, நக்கீரனிலிருந்து வெளியேறி, 'வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும்' என நான்கு தொகுதி நூல்களை எழுதி வெளியிட்டிருந்தார்.

அந்த நூலின் ஆங்கில மொழியாக்கதை 'Veerappan Saga raise and fall' என்ற பெயரில் 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பெங்களூரில் வெளியிட இருந்தார். 

அந்த நூலில் தன்னைப் பற்றி அவதூறான கருத்துகளும், காப்புரிமை பெற்ற புகைப்படங்களும் இருப்பதாக கூறி அந்த நூலுக்கு தடை விதிக்க பெங்களூர் இரண்டாவது சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நக்கீரன் கோபால் வழக்கு தொடர்ந்திருந்தார். நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

நக்கீரன் கோபால் பற்றி அவதூறான கருத்துக்களோ, காப்புரிமை பெற்ற புகைப்படங்களோ அந்த நூலில் இல்லை என 

சிவசுப்பிரமணியன் முறையிட்டு, நூலின் பிரதியையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். 

அந்த நூலை படித்துப் பார்த்து, ஆய்வு செய்த நீதிபதி, அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் நூலை வெளியிடுவதற்கான தடையை நீக்கி உத்தரவு வழங்கினார்.


இந்த வழக்கில் தனது தரப்பு முறையீட்டை நக்கீரன் கோபால் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, பிரமாண வாக்கு மூலம் அளிக்க வேண்டும் என பலமுறை நீதிமன்றம் உத்தரவிட்டும், நக்கீரன் கோபால் ஆஜராகாமல் இருந்து வந்துள்ளார். 

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது நக்கீரன் கோபால் நீதிமன்றத்தில் ஆஜராகாததால், அவருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, ஜூன் மாதம் 4ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்