பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்த சதி 3 பேர் கைது
BY NEWS TODAY
10 Apr 2026
0
பகிர்

பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்த சதி 3 பேர் கைது


மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்து விசாரணை


பிரதமர் நரேந்திர மோடியை தாக்க திட்டமிட்ட குற்றச்சாட்டில் பீகார் மாநிலத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். 

 பீகார் மாநிலம், புக்சார் மாவட்டத்தில் சிம்ரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். பிரதமர் தொடர்பான தகவல்களை சேகரித்து, தாக்குதல் நடத்த சதி செய்ததாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து லேப்டாப் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வெளிநாட்டு தொடர்புகள் உள்ளதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் சிறப்பு விசாரணை மேற்கொள்ளப்பட்டு, குற்றச்சாட்டின் தன்மை குறித்து அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்