02
Mar 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
டெல்லி மதுபான கொள்ளை வழக்கில் கெஜ்ரிவால் உட்பட 23 பேரை விடுவித்தது டெல்லி நீதிமன்றம்.
BY NEWS TODAY
27 Feb 2026
0
பகிர்

 டெல்லி மதுபான கொள்ளை வழக்கில் கெஜ்ரிவால் உட்பட 23 பேரை விடுவித்தது டெல்லி நீதிமன்றம்.

சிபிஐக்கு டெல்லி உயர்நீதிமன்றம் கண்டனம்.

ஆதாரம் இல்லாமல் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோரை சிறையில் வைத்ததாக சிபிஐக்கு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

*டெல்லி மதுபான கொள்ளை வழக்கில் சாட்சியமோ, ஆதாரங்களோ இல்லாமல் நூற்றுக்கணக்கான பக்கங்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த CBI மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ஏற்க மறுத்து, சிபிஐயின் ஜோடித்த வழக்கு இது என கூறி நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்து, குற்றம்சாட்டப்பட்ட டெல்லி முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால் உட்பட 23 பேர் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என உத்தரவிட்டு 23 பேரை விடுவித்தது டெல்லி நீதிமன்றம்.

அரவிந்த் கெஜ்ரிவால் கண்ணீர் மல்க பேட்டி.

“அதிகாரத்திற்காக அரசியல் விளையாட்டுகளை விளையாட வேண்டாம் என்று பிரதமரிடம் சொல்ல விரும்புகிறேன்; அரசியலமைப்போடு விளையாடாதீர்கள். அதிகாரம் வேண்டுமென்றால், நன்றாக வேலை செய்யுங்கள்”

ஆம் ஆத்மி கட்சியை முடிவுக்கு கொண்டுவர மோடியும் அமித் ஷாவும் சதித்திட்டம் தீட்டினர்.

ஆம் ஆத்மி கட்சி மற்றும் எங்கள் அனைவரையும் நேர்மையாளர்கள் என நீதிமன்றம் கூறியுள்ளது.

உண்மை வெற்றிபெறும் என நாங்கள் நம்பினோம்; சட்ட அமைப்பின் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது - டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்