02
Mar 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி கோவிலில் பிரதமர் மோடி தரிசனம்
BY NEWS TODAY
01 Mar 2026
0
பகிர்

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி கோவிலில் பிரதமர் மோடி தரிசனம் செய்தார்.


 பொதுமக்கள் ஆரவாரம் செய்து வரவேற்ப்பளி த்தனர்.


 முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி கோவிலில் முதல் பிரதமராக நரேந்திர மோடி கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார்.

 திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கு தற்போது முடிவுக்கு வந்த நிலையில் பிரதமர் மோடி கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

 மதுரை விமான நிலையம் அருகே மண்டேலா நகரில் பாரதீய ஜனதா மற்றும் கூட்டணி கட்சிகளின் அரசியல் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி மதுரை வந்தார். முன்னதாக மதுரை விமான நிலையத்தில் நடைபெற்ற விழாவில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

 அதன் பிறகு அங்கிருந்து காரில் திருப்பரங்குன்றம் சுப்ரமணியசாமி கோயிலுக்கு வந்தார். கோவிலில் அவருக்கு சிவப்பு கம்பளம் விரித்து பூரணக் கும்பம் மரியாதையுடன் வரவேற்பு தரப்பட்டது. 

 இதையடுத்து கோயிலுக்குள் சென்று சுவாமியை தரிசனம் செய்தார்.

 பின்னர் அவர்களுக்கு கோயில் பிரசாதமும் திருப்பரங்குன்றம் முருகனின் படமும் வழங்கப்பட்டது.

 அதைப் பெற்றுக் கொண்டு கொடிமரம் முன்பு வந்த அவர் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார்.

 இதையடுத்து வெளியே வந்த அவர் பொது மக்களை பார்த்து கைய சேர்த்துவிட்டு பொதுக்கூட்ட மேடைக்கு கிளம்பினார் 


----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்