02
Mar 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
சினிமாவில் அரசியல் பேசுவது தவறு கிடையாது மதுரையில் நடிகர் சிவகார்த்திகேயன் பேட்டி.;
BY NEWS TODAY
27 Feb 2026
0
பகிர்

சினிமாவில் அரசியல் பேசுவது தவறு கிடையாது;  

மதுரையில் நடிகர் சிவகார்த்திகேயன் பேட்டி.


அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில், சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் நடிகை ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகியுள்ள தாய்கிழவி திரைப்படம் மதுரை கோபுரம் திரையரங்கில் இன்று வெளியானது.


திரைப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை ராதிகா சரத்குமார், அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன், நடிகை ரேச்சல், நடிகர் பாலு, சரவணன் ஆகியோர் கோபுரம் திரையரங்கில் ரசிகர்களுடன் அமர்ந்து பார்த்தனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகரும் தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன் பேசியபோது :

தாய்க்கிழவி படத்தில் ஏராளமான நடிகர்கள் நடித்துள்ளனர் இது ஒரு ஜனரஞ்சகமான படம். எல்லா வயதினரும் பார்ப்பதற்காக ஆசைப்பட்டு எடுத்த படம்.

இந்த படத்தின் இயக்குனர் மதுரை மண்ணைச் சேர்ந்தவர் என்பதால் இந்த படத்தில் முதல்காட்சி மதுரையில் பார்க்கவந்தோம்.

இந்த படத்தில் சின்ன சின்ன இடங்களை கூட மதுரை மக்கள் சிரித்து ரசிக்கிறார்கள். நல்ல உணர்வுப்பூர்வமாக உள்ளது நல்ல விஷயத்தை சொல்வதற்கான வாய்ப்பு இந்த படத்தில் கிடைத்திருக்கிறது. திருப்தியான படமாக இருக்கிறது என படம் பார்த்தவர்கள் சொல்கிறார்கள். இந்த பாராட்டுகள் திருப்தியை தருகிறது. 

தாய்க்கிழவி என்பது ஆதி பெண் தெய்வத்தை குறிக்கும், ஒரு பெண் வீட்டிற்கு எவ்வளவு முக்கியம் என்பதும், பெண்ணை ஒரு தெய்வத்துக்கு சமமாக நினைக்கிறார்கள் என்பதுதான் தாய் கிழவி படம்.

பட்டப்படிப்பு படிக்காமல் குடும்ப நிர்வாகத்தை நிலைநிறுத்தக்கூடிய பெண்கள் இந்தியா முழுவதும் இருக்கிறார்கள். அதை சொல்கின்ற படம்தான் தாய்கிழவி. இந்த படம் வேறு எங்காவது ஹிட் ஆனால் இதுவும் ஒரு பான் இந்தியா படம் தான்.

நல்ல கதையை சொல்ல வேண்டும் நல்ல விஷயத்தை சொல்ல வேண்டும் என் படத்தில் சொல்ல முடியாதவற்றை, என் தயாரிப்பில் பண்ண வேண்டும்.

வேறு ஒரு தயாரிப்பாளரை காசு போட்டு பண்ணுங்க என்று சொல்ல முடியாது. அதனால் என்னோட தயாரிப்பில் பண்ணுகிறேன்.

இடையூறு என்பது எல்லாருக்குமே இருக்கிறது. இதை கடந்துதான் போக வேண்டும். என்னை ரசிக்கிற நாலு பேருக்கு அது பாசிட்டிவாக இருந்தால் போதுமானது.

உங்களை டார்கெட் செய்கிறார்களா? 

எல்லாத் துறைகளிலும் அது தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. 

எனது அடுத்தபடம் சேயோன் இந்த மண் சார்ந்த சிவக்குமார் முருகேசன் தான் அந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த மண்ணில் என்னவெல்லாம் ரசித்திருக்கிறீர்களோ அதனை அந்த படத்தில் காட்டுவதற்கு நிச்சயமாக முயற்சி செய்கிறேன்.

புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பு வழங்குவது குறித்த கேள்விக்கு?

புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது என்பது எனக்கு எல்லோரும் கொடுத்த வாய்ப்பை அதை பகிர்ந்து கொள்ள வேண்டும் என இந்த இடத்தையும் இந்த வெளிச்சத்தையும் பயன்படுத்துகிறேன்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் போன்ற படத்திற்கு நானும் காத்துக் கொண்டிருக்கிறேன்.

 அரசியலுக்கு வருவீர்களா? 

நான் பாட்டுக்கு பேசாம நல்லா இருக்கிறேன்.

திரைப்படங்களில் அரசியல் பேசப்படுவது குறித்த கேள்விக்கு ?

படங்களில் எல்லாமே அரசியல் பேசிக் கொண்டுதான் இருக்கிறோம். படத்தில் அரசியல் பேசுகிறோமே தவிர அதைப்பற்றி எனக்கு தெரியாது. நல்ல நடிகனாக நல்ல தயாரிப்பாளராக நல்ல குடிமகனாகவும் நல்ல மகனாகவும் நல்ல கணவனாகவும் நல்ல அப்பாவும் இருந்துட்டா நல்லது என நினைக்கிறேன் 

தமிழ்சினிமாவில் அரசியல் தொடர்ந்து பேசப்படுவது குறித்த கேள்விக்கு?

 சினிமாவில் அரசியல் பேசுவது தவறு கிடையாது. நமது சமூத்தின் பிரதிபலிப்பாக தான் சினிமா இருக்கிறது.

 சரி தவறு நீங்கள் சொல்லிக் கொண்டே இருந்தால் அதை சரியானதையும் சொல்வோம் தப்பானவற்றை திருத்தி கொள்வோம்.

தாய்க்கிழவி படம் பார்த்து கமல் சார், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன் செய்து பேசினார்கள். சூர்யா ஜோதிகா நேரடியாக வந்திருந்தார்கள் நேற்று ஏராளமான நடிகர்கள் எல்லாரும் வந்தார்கள்.

எனக்கு ஆதரவாக இருக்கிற எல்லோரையும் எந்த இடத்திலும் நான் விட்டுக் கொடுத்தது கிடையாது.

நடிகை ராதிகா சரத்குமார் பேசும்போது : 

சித்தியாக நடிக்கும் போது இதுக்கு மேல் எதுவும் பண்ண முடியாது என்றார்கள் அது மாதிரி ஒவ்வொரு படமும் நடிக்கும்போதும் ஒரு மகிழ்ச்சியாக உள்ளது சவாலாக எடுத்துக்கொண்டு எவ்வளவு சின்சியராக பண்ண முடியுமோ அதை பண்ணுகிறேன். 

எல்லா கதாபாத்திரங்களும் ஒரு சவால் தான். எனக்கு கிடைத்தது இந்த மண் சார்ந்தது. பாரதிராஜா அவர்களால் எனக்கு கிடைத்தது. அவருடைய தாயாரை வைத்து தான் இந்த கதாபாத்திரத்தை மையப்படுத்தினோம் , அதேபோன்று தான் பசும்பொன் படத்திலும் சரி கிழக்கு சீமையிலும் சரி  எனக்கு இது மறக்க முடியாத கதாபாத்திரம். இது பெண்களுக்காக முக்கியமான கருத்தை அனைவரும் சிறப்பாக சொல்லியுள்ளார்கள் அதுதான் எங்களுடைய பெருமை.

இயக்குனர் சிவகுமார் முருகேசன் பேசியபோது 

எஸ் கே நிறுவன தயாரிப்பில் 8 படத்தில் நானும் இடம் பெற்றுள்ளேன் வாய்ப்பு கிடைக்காம இருக்கிற புதிய இயக்குனர்களுக்கு எஸ்கே ப்ரொடக்சன் ஒரு நல்ல பிளாட்பார்ம். இந்தப் படத்தில் 13 புதுமுகங்கள் இருக்கிறார்கள். 

இந்த மண்ணில் சொல்லப்படாத நிறைய கதைகள் இருக்கிறது. அந்த கதைகளை முடிந்தவரை சொல்ல வேண்டும் என்பதுதான் கனவு.

தாய்கிழவிக்கு தேசிய விருது கிடைக்கும் என எதிர்பார்ப்பு உண்டா என்ற கேள்விக்கு பதிலளித்த சிவகார்த்திகேயன். முதலில் மக்கள் ஒத்துக் கொள்ள வேண்டும். மக்கள் எல்லோருக்கும் பிடித்து கொண்டாட வேண்டும். அதற்கு பின்பு என்ன கிடைத்தாலும் சந்தோசம். 

மதுரையில் படம் பார்த்த அனுபவம் குறித்த கேள்விக்கு?

மதுரைக்கு வரும் போதெல்லாம் கொண்டாட்டம் தான். படம் ரிலீசோடு வரும்போது டபுள் கொண்டாட்டம், நடிகர் தயாரிப்பாரை தாண்டி இதுபோன்ற ரெஸ்பான்ஸ் பார்க்க வரும்போது ரசிகனாக தான் வர வேண்டும். 

அஜித்குமாரை வைத்து படம் தயாரிப்பீர்களா ? என்ற கேள்விக்கு?

நான் ஒரு குட்டி தயாரிப்பு வைத்து நடத்திக் கொண்டிருக்கிறேன். 

சார் ஓகே சொன்னால் சிறப்பாக பண்ணுவோம். செம்மயா பண்ணுவோம். அந்த படம் அவருடைய ரசிகர்களுக்கு திருவிழாவான படமாக அமையும் அது ஒரு கனவாக தான் இருக்கிறது. 

என்னால முடிந்தது நமக்கு கிடைத்திருக்கிற சம்பளத்தில் சரியான படம் பண்ணி நல்ல படமும் பண்ணி கொண்டு வர வேண்டும் என்பது தான் என்றார். 

 நிகழ்ச்சி ஏற்பாடுகளை அகில இந்திய சிவகார்த்திகேயன் ரசிகர் மன்ற தலைவர் சன் டிவி மோகன் செய்திருந்தார்.

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்