02
Mar 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
கோடிக்கணக்கில் பணம் தராவிட்டால்?- நடிகர் ரன்வீர் சிங்கிற்கு பகிரங்க மிரட்டல்
BY NEWS TODAY
11 Feb 2026
0
பகிர்

கோடிக்கணக்கான ரூபாய் கேட்டு வாட்ஸ் அப்பில் மிரட்டல் விடப்பட்டதால் பிரபல நடிகர் ரன்வீர் சிங் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.



இந்தி பட இயக்குனர் ரோஹித் ஷெட்டி வீட்டின் மீது மர்ம நபர்கள் சமீபத்தில் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக ஐந்து பேரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்நோய் தொடர்புடையவர்கள் தான் காரணம் என போலீஸார் சந்தேகப்படுகின்றனர்.  இந்த நிலையில் பிரபல இந்தி நடிகர் ரன்வீர் சிங்கிற்கு வந்துள்ள மிரட்டல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் சமீபத்தில் நடித்த துரந்தர் திரைப்படம் ரசிகர்களிடம் அமோக ஆதரவைப் பெற்றதுடன் வசூலையும் வாரிக் குவித்தது.



இந்த நிலையில், ரன்வீர் சிங்கின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார். அதில் கோடிக்கணக்கில் பணம் தரவேண்டும் என கோரியுள்ளார். இதுதொடர்பாக, மும்பை போலீஸாரிடம் ரன்வீர் சிங் புகார் அளித்தார். இதனால் ரன்வீர் மற்றும் தீபிகா படுகோன் வசிக்கும் வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் வாட்ஸ் அப்பில் மிரட்டல் விடுத்தவர் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் பாலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 


----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்