02
Mar 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
பக்கவாதம் வந்த 4 முதல் 6 மணி நேரத்தில் சிகிச்சை பெற்றால் முழு குணமடையலாம்.
BY NEWS TODAY
26 Feb 2026
0
பகிர்

 பக்கவாதம், மூளை ரத்தக் கசிவு நோய்களில் 4 முதல் 6 மணி நேரத்தில் சிகிச்சை பெற்றால் முழு குணமடையலாம்.


நவீன சிகிச்சை மூலம் 800 க்கும் மேற்பட்டோர் இயல்புநிலை அடைந்துள்ளனர் -


 நரம்பியல் துறை தலைவர் டாக்டர் கணேஷ் குமார்



மதுரை வேலம்மாள் மருத்துவமனை நரம்பியல் துறை சார்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு கூட்டத்தில் தலைமை மருத்துவர் கணேஷ்குமார் கூறுகையில், இன்றைய நவீன மருத்துவ தொழில்நுட்பம் மூலம் மூளையில் ஏற்படும் ரத்தக் கசிவு, இரத்த வெடிப்பு போன்றவற்றிற்கு ஆஞ்சியோ சிகிச்சை மூலம் உடனடி சிகிச்சை அளித்து பக்கவாதம் போன்ற நோய்களை தடுத்து விடலாம்.


Befast எனப்படும் மருத்துவ அறிவியலின் மூலம்

கண், உளறல் பேச்சு, தூக்கமின்மை, உடல் திறன், கை கால் செயலிழப்பு,படபடப்பு போன்றவைகள் பக்கவாதம் ஏற்படக்கூடிய அறிகுறிகள். கோல்டன் அவர் எனப்படும் தங்க நேரத்தில் 4 முதல் 6 மணி நேரத்திற்குள் உடனடியாக மருத்துவமனைக்குள் அனுமதித்தால், நவீன சிகிச்சையின் மூலம். பக்கவாதம் அற்ற முழு மனிதராக மாற்ற முடியும்.


 மதுரை வேலம்மாள் மருத்துவமனை மூளை மற்றும் நரம்பியல் முதல் நிலை மருத்துவர் டாக்டர் கவிதா கூறுகையில், 


 பக்கவாதம் ஏற்பட்ட 24 மணி Circumstances சிகிச்சை பெற வந்தால் நோயாளிக்கு சிறு குறையில்லாமல் குணப்படுத்த முடியும். 

 மேலும் மூளை மற்றும் நரம்பியல் துறைகளில் ஏற்படும் குறைபாடுகளை உடனுக்குடன் சரி செய்ய இதயத்திற்கு செய்யப்படும் ஆஞ்சியோ போல் மூளையிலும் ஆஞ்சியோ சிகிட்சையழித்து ஸ்டன்ட் பொருத்தப்படும் .

இதய நாளங்களில் பொருத்தப்படும் சன் போல் இல்லாமல் மூளையில் ஏற்படும் ரத்தக் கசிவு மற்றும் ரத்த வெடிப்பு ஏற்படும் சிகிச்சைக்கு மூலம் சிகிச்சை அளித்த பின் உடனடியாக எடுத்து விட முடியும் ஆகையால் நோயாளிக்கு எந்தவித சிரமமும் இல்லாமல் உடனுக்குடன் சிகிச்சை மேற்கொள்ள நவீன தொழில்நுட்பம் உதவுகிறது 


 சிகிச்சைக்குப் பின் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு மையம் மூலம் பிசியோதெரபி உடல் நலன் மற்றும் மன நலன் சிகிச்சை அளிக்கப்படுகிறது இதன் மூலம் அவர்கள் தொடர்ந்து சிகிச்சைக்கு பின் இயல்பு வாழ்க்கையை துவங்க எளிதான சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது உலகத் தரமான சிகிச்சை குறைந்த கட்டணத்தில் செய்வதன் மூலம் உடனடியாக நோயாளிகள் சிகிச்சை எடுத்து தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேலம்மாள் மருத்துவமனை சிறப்பான ஏற்பாடுகள் செய்கிறது என Dr கவிதா கூறினார்


 மேலும் வேலம்மாள் மருத்துவமனை மூளை மற்றும் நரம்பியல் துறை நரம்பியல் துறை சிறப்பு மருத்துவர்கள், கதிரியக்க துறை முதன்மை மருத்துவர்கள் கதிரியக்கத்துறை அலுவலர்கள் மருத்துவ குழுவினர் டாக்டர் அமல்ராஜ் டாக்டர் சக்தி மகேந்திரன் டாக்டர் அமுதா பாரதி டாக்டர் பஞ்சாபிகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்