02
Mar 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
அதிமுகவுக்கே பாஜக தான் தொகுதி ஒதுக்கும்- பெ.சண்முகம் விமர்சனம்
BY NEWS TODAY
25 Feb 2026
0
பகிர்

அதிமுகவுக்கே பாஜக தான் தொகுதியை ஒதுக்கித் தரும் போலிருக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் கூறியுள்ளார். 

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாநிலச் செயலாளர் சண்முகம் அவரது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை இன்று (பிப்ரவரி 25) வெளியிட்டுள்ளார். அதில்,, "கூட்டணிக்கு தலைமை அதிமுக தான் என்று எடப்பாடி கூறிக் கொண்டிருக்கிறார். ஆனால் அக்கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் எல்லாம் பாஜகவுடன் தான் தொகுதி பங்கீடு குறித்து பேசுவோம் என்று சொல்கிறார்கள். இதை பாஜகவும் மறுக்கவில்லை. 

போற போக்கை பார்த்தால் அதிமுகவுக்கே பாஜக தான் தொகுதியை ஒதுக்கித் தரும் போலிருக்கிறது. மோடியா இந்த லேடியா என்று கேட்ட ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள் சிந்திக்க வேண்டிய நேரம் இது" என்று தெரிவித்துள்ளார். மதுரையில் நேற்று பேட்டியளித்த அதிமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், " அமமுக கட்சிக்கு தகுதியான தொகுதிகளை பாஜக மூலம் முயற்சி செய்வோம்" என்று கூறியிருந்தார். 

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்