02
Mar 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
கச்சத்தீவு அந்தோணியர் ஆலயத் திருவிழா- 5 நாட்கள் மீன் பிடிக்கத் தடை
BY NEWS TODAY
25 Feb 2026
0
பகிர்

கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு 5 நாட்கள் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகுகள் மீன்பிடிக்க செல்லக்கூடாது என்று மீன்வளத்துறை வலியுறுத்தியுள்ளது. 

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் இருந்து 16 கடல் மைல் தொலைவில் கச்சத்தீவு உள்ளது. இந்த தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த விழாவில் தமிழகம் மற்றும் இலங்கையைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொள்வாரகள். இந்த ஆண்டுக்கான திருவிழா பிப்ரவரி 27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. 

இந்த திருவிழாவுக்கு ராமேஸ்வரத்தில் இருந்து செல்ல 75 விசைப்படகுகளும் 26 நாட்டுப்படகுகளும் என மொத்தம் 101 படகுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த படகுகளில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் செல்ல உள்ளனர். இந்த நிலையில் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவிற்கு செல்லும் நாட்டுப்படகுளை மீன்வளத்துறை துணை இயக்குனர் சின்ன குப்பன் தலைமையில் ராமேஸ்வரம் உதவி இயக்குனர் தமிழ்மாறன், மண்டபம் இயக்குனர் சிவக்குமார் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதேபோல் ராமேஸ்வரம் துறைமுக பகுதியில் விசைப்படகுகளையும் ஆய்வு செய்தனர்.

கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு இன்று முதல் மார்ச் 1-ம் தேதி வரை 5 நாட்கள் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், தங்கச்சிமடம், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விசைப்படகு மற்றும் நாட்டுப்படகுகள் மீன்பிடிக்க செல்லக்கூடாது என்று மீன்வளத்துறை அதிகாரிகள் தடை விதித்து உள்ளனர். 

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்