25
May 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
தமிழருக்கு ஆஸ்திரேலியாவின் உயரிய விருது
BY NEWS TODAY
21 May 2026
0
பகிர்

சிறந்த சமூக சேவைக்காக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவருக்கு ஆஸ்திரேலியாவின் உயரிய விருதான Medal of the Order of Australia - OAM விருது குவின்ஸ்லாந்து கவர்னர் Hon Dr Jennette Young AC PSM அவர்களால் இன்று முறைப்படி வழங்கப்பட்டது. திரு. பழனிச்சாமி ஒச்சாத்தேவர் ஆஸ்திரேலிய நாட்டின் குவின்ஸ்லாந்தில் வசிக்கும் தமிழர் மற்றும் இந்திரியர்களிடையே சமூகப் பணி ஆற்றியமைக்காக அந்த நாடு இந்த விருதை வழங்கி கெளரவித்துள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு ஆஸ்திரேலியா அரசு வழங்கிய இந்த உயரிய விருதால் அங்குள்ள தமிழர்களுக்கு பெருமை கிடைத்துள்ளது.

​திரு. பழனிச்சாமி ஓ. தேவர் JP (Qual) OAM

முனைவர் பட்ட ஆய்வாளர் (சமூகப்பணி) - ஜே.சி.யூ (JCU), சமூகப்பணி இளங்கலை - யூ.க்யூ (UQ), எம்.ஃபில் (MPhil), எம்.எஸ்சி (MSc) படித்துள்ளார்

 இவர் பல்வேறு பொறுப்புகளை வகித்து வருகிறார்.

​தலைவர் - ஆஸ்திரேலியாவின் ஐக்கிய நாடுகள் சங்கம் (UNAA) குயின்ஸ்லாந்து பிரிவு

​சமூகப் பணியாளர் - குயின்ஸ்லாந்து சுகாதாரம் (QLD Health)

​விரிவுரையாளர் - சமூகப்பணிப் பள்ளி, நேப்ஸ் (NAPS)

​செயற்குழு உறுப்பினர் மற்றும் பிரதிநிதி - டுகெதர் யூனியன் (Together Union)

​துணை அமைப்பாளர் - மல்டிகல்சுரல் லேபர் குயின்ஸ்லாந்து (MLQ)

​ஆலோசகர் மற்றும் முன்னாள் தலைவர் - எஃப்.ஐ.சி.க்யூ (FICQ)

​நிறுவனத் தலைவர் (முன்னாள்) - பிரிஸ்பன் தமிழ் சங்கம்

​முன்னாள் தலைவர் - குயின்ஸ்லாந்து தமிழ் சங்கம் போன்ற பொறுப்புகளில் இருந்து வருகிறார்.

 தமிழர் என்ற முறையில் நாமும் அவரை பாராட்டுகிறோம். அவரைப் பாராட்ட விரும்புபவர்கள் கீழே உள்ள whatsapp மற்றும் ஈமெயில் முகவரிக்கு வாழ்த்து செய்தி அனுப்பலாம்.

​கைபேசி: +61 421656000

​மின்னஞ்சல்: palanithevar@gmail.com



----------------------
ஆசிரியர் NEWS TODAY
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்