தவெகவில் இணைந்த நாம் தமிழர் கட்சி வெற்றிக்குமரன்
BY NEWS TODAY
28 May 2026
0
பகிர்

நாம் தமிழர் கட்சியின் தொடக்க காலத்திலிருந்தே கட்சியின் வளர்ச்சிக்காக உழைத்து, பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக அதன் மாநில ஒருங்கிணைப்பாளராகப் பொறுப்பு வகித்துப் பணியாற்றிய வெற்றிக்குமரன், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளின் காரணமாக 2023ஆம் ஆண்டு அக்கட்சியிலிருந்து விலகினார்.

அதனைத் தொடர்ந்து, “தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கம்” என்ற அமைப்பை தொடங்கி தமிழர் அரசியல் மற்றும் சமூக உரிமைகளுக்காக செயல்பட்டு வந்தார். பின்னர் அந்த இயக்கத்தை தமிழக வாழ்வுரிமை கட்சியுடன் இணைத்து தனது அரசியல் பயணத்தை முன்னெடுத்தார்.

அதன் தொடர்ச்சியாக, அந்தக் கட்சியிலிருந்தும் விலகி, தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் அதன் பொதுச்செயலாளரும் ஊரக வளர்ச்சித் துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான ஆனந்த் அவர்களின் தலைமையில் தன்னை இணைத்துக் கொண்டார்.

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்