30 ஆண்டுகள் ஆட்சி செய்த திமுகவால் செய்ய முடியாததை முதல்வர் விஜய் செய்துள்ளார்.- அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ‘சவால்’ பேச்சு
BY NEWS TODAY
13 Jun 2026
0
பகிர்

சென்னை: “காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல் கட்சிகளுடன் கூட்டணி இல்லையென்றால் திமுக 10 தொகுதிகளில் கூட வென்றிருக்காது. இப்போதே மு.க.ஸ்டாலினும், எடப்பாடி பழனிசாமியும் ஒன்று சேர்ந்துவிட்டார்கள். அதற்கு பாஜகவின் ஆதரவும் உள்ளது” என பொதுப் பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் மாற்றுக் கட்சியினர் இணையும் இந்த நிகழ்வில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக 26 கட்சிகளோடு கூட்டணி வைத்தது, அதிமுக 10 கட்சிகளோடு கூட்டணி வைத்தது. தவெக தனித்து விடப்பட்டது என்றார்கள். ஆனால், 1967-க்கு பிறகு மிகப் பெரிய ஆட்சி மாற்றத்தை தவெக உருவாக்கியது. 

சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட தவெகவை எல்லோரும் கிண்டல் செய்தனர். சாதிய பின்புலம், பண பலம் இல்லாமல் சாமானிய வேட்பாளர்களை நிறுத்தினோம். எம்ஜிஆருக்கு பின்னர் விஜய் மிகப் பெரிய புரட்சியை உருவாக்குவார் என்று நாங்கள் நம்பினோம். விஜய்யின் தாக்கத்தை உணரவே இல்லை என இப்போது திமுக தலைவர் ஸ்டாலின் சொல்கிறார்.

எம்ஜிஆரின் கனவும், ஜெயலலிதாவின் கனவும், தவெகவின் கனவும் ஒன்று. இந்த ஊழல் குடும்பத்தை தூக்கியெறியவே அவர்கள் இருவரும் கடைசி வரை கஷ்டப்பட்டனர்.

இன்னும் 25, 30 ஆண்டுகளுக்கு தவெகதான் எதிர்காலம் என நினைத்து அதிமுகவினர் தவெகவில் இணைந்து வருகின்றனர். 

தவெக குதிரை பேரம் செய்வதாக சொல்கிறார் பழனிசாமி. உங்கள் மீது நம்பிக்கை இல்லாமல் தான் அதிமுகவினர் எங்களிடம் வருகின்றனர். 

திமுக தலைவர் ஸ்டாலின் குடும்பத்தின் பண்ணையார்த்தனத் தால் தான் அக்கட்சி தோற்றது. காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்றால் திமுக 10 தொகுதிகளில் கூட வென்றிருக்காது.

30 ஆண்டுகள் ஆட்சி செய்த திமுகவால் செய்ய முடியாததை முதல்வர் விஜய் செய்துள்ளார். முதல்வர் ஃபண்ட் வேண்டாம் என சொல்லி, ஊழலை ஒழித்துள்ளார். பதிவுத் துறை உள்ளிட்ட எந்த துறையிலும் இப்போது ஊழல் இல்லை. முதல்வர் வழியை பின்பற்றி அமைச்சர் ஃபண்ட்-களும் வசூலிக்கப்படுவதில்லை.

மு.க.ஸ்டாலினும், எடப்பாடி பழனிசாமியும் இப்போதே ஒன்று சேர்ந்துவிட்டார்கள். இவர்கள் இருவரும் தவெக அரசுக்கு எதிராக ஒரே மாதிரியான அறிக்கையை வெளியிடுகிறார்கள். 

திமுகவும், அதிமுகவும் ஒன்று சேர்ந்தாலும் கூட, தவெக 60 சதவீதம் வாக்குகள் பெற்று வெற்றி பெறும். இடைத்தேர்தலில் ஒரு தொகுதியில், ஏன் ஒரு பூத்தில் கூட முன்னிலை பெற்று காண்பிக்குமாறு அதிமுகவுக்கு சவால் விடுகிறேன்.

எனக்கு எதிராக பல்வேறு பொய் பரப்புரைகளை திமுக பரப்புகிறது. அதெல்லாம் முழுக்க பொய். திமுக ஆட்சி போன பின்னர், ரெட் ஜெயன்ட்-டின் ஆதிக்கம் ஒழிந்து விட்டது. திரையுலகினர் நிம்மதியாக வேலை செய்கின்றனர். திமுகவும் அதிமுகவும் ஒன்று சேர்ந்துவிட்டது என சொல்கிறோம். வேண்டுமானால் நாங்கள் கூட்டணி வைக்க மாட்டோம் என பழனிசாமியும், ஸ்டாலினும் செய்தியாளர்கள் சந்திப்பில் வெளிப்படையாக சொல்லுங்கள் பார்ப்போம்” எ

ன்றார்.



----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்