பலத்த பாதுகாப்புடன் ராணுவ விமானத்தில் மதுரை வந்த நீட் மறு தேர்வு வினாத்தாள்!
BY NEWS TODAY
17 Jun 2026
0
பகிர்



மதுரை: நீட் தேர்வு வினாத்தாள்கள் கசிந்து முறைகேடு நடைபெற்ற நிலையில் வருகிற 21-ம் தேதி நீட் மறுதேர்வு நடைபெறவுள்ளது. இதற்கான வினாத்தாள்கள், தென் மாவட்டங்களில் நடைபெறும் தேர்வு மையங்களுக்கு அனுப்பும் பணியின் ஒரு பகுதியாக, டெல்லியில் இருந்து தனி ராணுவ விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன.

தொடர்ந்து மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு தேவை யான வினாத்தாள்கள் அஞ்சல் துறை வாகனம் மூலமாக பலத்த பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டன.

தேசிய தேர்வு முகமை, தபால்துறை மற்றும் பாதுகாப்பு அமைப்புகள், அஞ்சல் துறையுடன் இணைந்து வினாத்தாள்கள் பாதுகாப்பாக சென்றடைவதை உறுதி செய்து வருகின்றனர்.






----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்