போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்...!
BY NEWS TODAY
28 Jun 2026
0
பகிர்

சென்னை: போலியோ வருவதை தடுக்கும் வகையில் ஆண்டுதோறும் நாடு முழுவதும் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இலவச போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

தமிழகம் முழுவதும் 52.91 லட்ட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. மருத்துவமனைகள், பள்ளிக்கூடங் கள், ரெயில் நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள் என மொத்தம் 43 ஆயிரத்து 51 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை பாலவாக்க த்தில் உள்ள ஆதி திராவிடர் நல உயர்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். குழந்தை களுக்கு சொட்டு மருந்து வழங்கி முதல்-அமைச்சர் விஜய் முகாமை தொடங்கி வைத்தார். இதையடுத்து, தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் தொடங்கியுள்ளது. இன்று மாலை 5 மணிவரை போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு (5 வயதிற்கு உட்பட்ட) போலியோ சொட்டு மருந்து வழங்க வேண்டும் என்று அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது

.


----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்