26
Jul 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
பேட்டரி வாகனங்களுக்கு மக்கள் மாற வேண்டும்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அழைப்பு:
BY NEWS TODAY
05 Jul 2026
0
பகிர்

குப்பம்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, சித்தூர் மாவட்டத்தில் உள்ள தனது குப்பம் தொகுதியில் 3 நாள் சுற்றுப்பயணம் தொடங்கினார். இதில் 2-ம் நாளான நேற்று ரூ.117 கோடி செலவில் அதிநவீன பஸ் நிலையம் மற்றும் பணிமனைக்கு அடிக்கல் நாட்டினார்.

இதையடுத்து அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர்: ராயலசீமா மாவட்டங்களில் ரூ.1 லட்சம் கோடி செலவில் தோட்டக் கலை மையம் அமைக்கப்பட உள்ளது. இதில் தனியார் ரூ.60 ஆயிரம் கோடியும், அரசு ரூ.40 ஆயிரம் கோடியும் முதலீடு செய்ய உள்ளன.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பதிலாக இனி பேட்டரி வாகனங்களை மக்கள் பயன்படுத்த வேண்டும். ஸ்கூட்டர்கள், கார்கள், பேருந்துகள் எல்லாம் பேட்டரியில் இயங்க வேண்டும். அப்போது தான் சுற்றுச்சூழல் மேன்மை அடையும். விரைவில் ஆந்திர அரசு பேருந்துகள் சூரிய சக்தி மூலம் இயங்கும்.

பிரபல ‘அடிதாஸ்’ நிறுவனம் ஆந்திராவுக்கு வரவுள்ளது. இதன் மூலம் 20 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசினார்

.



----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்