26
Jul 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
இந்தியாவின் முதல் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட மக்கள் தொகை சுயக் கணக்கெடுப்பு வசதி: தமிழ்நாட்டில் (ஜூலை 17) இன்று தொடக்கம்:
BY NEWS TODAY
17 Jul 2026
0
பகிர்

சென்னை: தமிழகத்தில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள் இன்று (ஜூலை 17) முதல் தொடங்குகின்றன.

இதன் முதற்கட்டமாக, பொதுமக்கள் தங்களின் விவரங்களை இணையதளத்தில் தாங்களாகவே பதிவு செய்யும் 'சுய கணக்கெடுப்பு' வசதி இன்று முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்று தமிழ்நாடு மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநரகத்தின் தலைமை கணக்கெடுப்பு அதிகாரி சுந்தரேஷ் பாபு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாகப் பேசிய அவர், "மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் 16-ஆவது மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள் தமிழகத்தில் தொடங்குகின்றன. இதற்கு முன்னதாக கடந்த 2011-ஆம் ஆண்டில்தான் கணக்கெடுப்பு நடைபெற்றது. தற்போது நடைபெற உள்ள கணக்கெடுப்பு இந்தியாவின் முதல் 'டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு' ஆகும். காகிதப் பதிவேடுகளுக்குப் பதிலாக, நிகழ்நேரத் தரவுகளைச் சேகரிக்க பிரத்யேக மொபைல் செயலிகள் பயன்படுத்தப்படவுள்ளன" என்றார்.

முதல்கட்டமாக 2026 ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதத்திற்குள் மாநில அரசுகளால் தேர்ந்தெடுக்கப்படும் 30 நாட்கள் தொடர்ச்சியான காலக்கட்டத்தில் நடத்தப்படும். இக்கட்டத்தின் போது வீடுகளின் நிலைமை, குடும்பத்திற்கு கிடைக்கும் வசதிகள் மற்றும் சொத்துக்கள் பற்றிய தரவுகள் சேகரிக்கப்படும். தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 30 வரை வீடு வீடாகக் கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. இக்கணக்கெடுப்பின் போது வீட்டின் வசதிகள், குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள் மற்றும் பயன்பாடுகள் சார்ந்த சுமார் 33 கேள்விகள் கேட்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இரண்டாம் கட்டமாக, ,இந்தியா முழுவதும் பிப்ரவரி 2027-ல் நடத்தப்படும். இதில் சாதிவாரி கணக்கெடுப்பு, மக்கள் தொகை சார் பண்புகள்,கல்வியறிவு, தொழிலாளர் இடம் பெயர்வற்றிய தரவுகள் சேகரிக்கப்படும். 2027 மார்ச் 1 அன்று இந்தியாவின் மக்கள் தொகை அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்றும் தெரிவித்தார்.

மேலும், மக்கள் தொகை கணக்கெடுப்பில் பொதுமக்கள் தங்களின் விவரங்களை இணைய தளத்தில் தாங்களாகவே பதிவு செய்வதற்கான ‘சுய கணக்கெடுப்பு’ (Self-Enumeration) வசதி நாளை (ஜூலை 17, 2026) முதல் ஜூலை 31 வரை செயல்பாட்டில் இருக்கும் என்றும் தெரிவித்தார். இதில் சமர்ப்பிக்கப்படும் தகவல்கள் அதிகாரப்பூர்வ தரவுத்தளத்தின் ஒரு பகுதியாக மாறும் என்பதால், பொதுமக்கள் துல்லியமான தகவல் களை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சுய கணக்கெடுப்பை வெற்றிகரமாக முடித்தவுடன் ஒரு அடையாள எண் உருவாக்கப்படும். இந்த எண்ணை தங்களின் இல்லங்களுக்கு வரும் கணக்கெடுப்பாளர்களிடம்காண்பிக்க வேண்டும். இந்த சுய கணக்கெடுப்பு வசதியைப் பயன்படுத்தாத குடும்பங்கள் ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 30 வரை நடைபெறும் என்றும் தெரிவித்

தார்


----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்