காலியாகும் ஓபிஎஸ் கூடாரம்: திமுகவில் இன்று ஐக்கியமாகும் முன்னாள் அமைச்சர்!
BY NEWS TODAY
21 Jan 2026
0
பகிர்

ஓபிஎஸ்சின் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு திமுகவில் இன்று இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



தமிழ்நாட்டில் இன்னும் மூன்று மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது. இதற்காக தேர்தல் பணிகளில் அனைத்துக் கட்சிகளும் தீவிரமாகியுள்ளன. இந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தளபதியாக திகழ்ந்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (ஜனவரி 21) திமுகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.



தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற வைத்திலிங்கம், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில் 2001-2006-ம் ஆண்டு வரை வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சராகவும், 2011-2016-ம் ஆண்டு வரை நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்த பிறகு, அவர் மாநிலங்களவை உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார். அதிமுகவில் பல்வேறு முக்கிய பொறுப்புகளையும் வகித்த அவர், ஓ.பன்னீர்செல்வத்தின் வலதுகரமாக திகழ்ந்தார்.



அவருடன் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான  வெல்லமண்டி நடராஜன், குன்னம் ராமச்சந்திரன் ஆகியோரும் திமுகவில் இன்று இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழகம் வரும் பிரதமர் மோடியை ஓ.பன்னீர்செல்வம் சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், வைத்திலிங்கம் திமுகவில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.சமீபத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான மனோஜ் பாண்டியன், தனது எம்எல்ஏ பதவியை ராஜினமா செய்து விட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்