மனைவி, குழந்தைகள், தாயை சுட்டுக் கொன்ற அரசு ஊழியர்: அடுத்து செய்த அதிர்ச்சி சம்பவம்
BY NEWS TODAY
21 Jan 2026
0
பகிர்

உத்தரப்பிரதேசத்தில் மனைவி, மகன்கள், தாய் என நான்கு பேரை சுட்டுக் கொலை செய்த அரசு ஊழியர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



உத்தரப்பிரதேச மாநிலம், சகாரன்பூர் மாவட்டத்தில் உள்ள சர்சாவா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கௌஷிக் விஹார் காலனியைச் சேர்ந்தவர் அசோக் ரத்தோர்(40). அரசு ஊழியரான இவரது வீடு நேற்று மாலை வரை பூட்டிக் கிடந்தது. இந்த நிலையில் அசோக் ரத்தோரின் மைத்துனர் பலமுறை செல்போனில் தொடர்பு கொண்டும் பதில் அளிக்கப்படவில்லை. இதனால் தனது மகனை அசோக் ரத்தோர் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். அவர் வந்து பார்த்த போது வீட்டின் உள்புறம் பூட்டப்பட்டிருந்தது. கதவைத் தட்டியும் திறக்கப்படவில்லை.



இதனால் உடனடியாக போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த போலீஸார் அசோக் ரத்தோர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கு ரத்த வெள்ளத்தில் அசோக் ரத்தோர், அவரது மனைவி அஜந்தா(37), மகன்கள் கார்த்திக்(16), தேவ்(13), ரத்தோரின் தாய் வித்யாவதி(70) ஆகியோரின்  இறந்து கிடந்தனர். ஐந்து பேரின் தலைகளிலும் துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது தெரிய வந்தது.



இந்த தகவல் கிடைத்ததும் மாவட்ட மாஜிஸ்திரேட் மணீஷ் பன்சால் மற்றும் எஸ்எஸ்பி ஆஷிஷ் திவாரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். தடயவியல் குழுவும் குற்றம் நடந்த இடத்தை ஆய்வு செய்தது, மேலும் ஐந்து உடல்களும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. இது தொடர்பாக விசாரணை நடத்திய போது, அசோக் ரத்தோர், தனது மனைவி, மகன்கள், தாய் என நான்கு பேரை நெற்றியில் சுட்டுக் கொலை செய்த பின், தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்தது தெரிய வந்தது. அசோக் ரத்தோர், அவரது மனைவி அஜந்தா ஆகியோரின் உடல்கள் தரையிலும், அவரது தாய் மற்றும் இரண்டு மகன்களின் உடல்கள் படுக்கையிலும் கிடந்தன. அத்துடன் அசோக்கின் உடல் அருகே இருந்த மூன்று நாட்டுத் துப்பாக்கிகள் மீட்கப்பட்டன.



போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், அசோக் ரத்தோர்  மனஉளைச்சலால் பாதிக்கப்பட்டு சண்டிகரில் சிகிச்சை பெற்று வந்தது. இது தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 


----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்