எம்.ஜி.ஆரின் கனவை நனவாக்குவோம்: பிரதமர் மோடி உறுதி
BY NEWS TODAY
17 Jan 2026
0
பகிர்

சமூகத்திற்கான எம்.ஜி.ஆரின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்க நாங்கள் எப்போதும் பாடுபடுவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.



அதிமுகவின்  நிறுவனத் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்த நாள் தமிழகம் முழுவதும் அதிமுகவினரால் இன்று(ஜனவரி 17) கொண்டாடப்படுகிறது.  எம்.ஜி.ஆரின் பிறந்த நாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி அவரது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.



அதில்," எம்.ஜி.ஆரின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு அவரது பங்களிப்பு மகத்தானது. தமிழ்க் கலாச்சாரத்தைப் பிரபலப்படுத்துவதிலும் அவரது பங்கு அதே அளவுக்குக் குறிப்பிடத்தக்கது. சமூகத்திற்கான அவரது தொலைநோக்குப் பார்வையை நனவாக்க நாங்கள் எப்போதும் பாடுபடுவோம்" என்று கூறியுள்ளார்.

 


----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்