11
Mar 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
தவெகவுடன் கூட்டணி குறித்து அதிமுக, பாஜக மறுப்பு
BY NEWS TODAY
10 Mar 2026
0
பகிர்

தவெகவுடன் கூட்டணி குறித்து அதிமுக, பாஜக மறுப்பு

 தவெக விளக்கம் 


தமிழக வெற்றிக் கழகம் கட்சியுடன் தேர்தல் கூட்டணி அமைக்கும் முயற்சி புதுப்பிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களை அதிமுக மற்றும் பாஜக தலைவர்கள் மறுத்துள்ளனர்.

அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி. முனுசாமி, TVK-வை அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்க்கும் முயற்சி குறித்து எந்த தகவலும் இல்லை என்று தெரிவித்தார். 

 தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழக வெற்றி கழகம்  சேரும் வாய்ப்பு குறித்து வெளியாகும் தகவல்கள் வெறும் வதந்திகள் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனும் கூறினார்.

அதேபோல், என்டிஏவுடன் கூட்டணியா என்ற கேள்விகளுக்கு, "வதந்திகளுக்கு பதில் அளிப்பதில்லை" என்று, தவெகவின் ஆதவ் அர்ஜூனாவும் தெரிவித்தார். 

என்டிஏ கூட்டணியில் தவெகவை இணைக்க மத்திய அமைச்சர் அமித் ஷா முயற்சி மேற்கொண்டு வருவதாகவும், தவெகவுக்கு 50 சீட்டுகளும், துணை முதல்வர் பதவியும் தரப்படுவதாக தகவல் வெளியானது.

 இந்நிலையில் அதிமுகவினர் கூறுகையில் விஜய்க்கு எப்போதெல்லாம் சிக்கல் வருகிறதோ அந்த நேரத்தில் இது போன்ற பேச்சு எழுவது வழக்கமாகிவிட்டது என்று கூறுகின்றனர்.


----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்