11
Mar 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
விசுவாசத்துக்கு ஓ.பி.எஸ். என்றால், துரோகத்திற்கு பழனிசாமி
BY NEWS TODAY
07 Mar 2026
0
பகிர்

விசுவாசத்துக்கு ஒரு ஓ.பி.எஸ். என்றால், துரோகத்திற்கு பழனிசாமி   ஓபிஎஸ் இணைப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு  மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே நடந்த ஓபிஎஸ் அணியினர் திமுகவின் இணைப்பு விழா நடைபெற்றது. விழாவில் திமுகவில் இணைந்த ஓபிஎஸ் க்கு முதல்வர் ஸ்டாலின் கருப்பு சிவப்பு துண்டு அணிந்து கட்சியில் சேர்த்துக் கொண்டார்.   விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது,  2021 தேர்தலின்போது இருந்ததைவிட, நாம் இப்போது கூடுதலாக பலம் பெற்றிருக்கிறோம். கடுமையாக உழைத்தால் 200 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி நிச்சயம். இந்த மேடை வித்தியாசமான மேடை. சில காலத்திற்கு முன்பு வரை ஓ.பி.எஸ். இந்த மேடையில் இருப்பார் என்று அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார். ஆனால், லேட்டாக இருந்தாலும், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இருந்த தாய்க்கழகமான திமுகவுக்குதான் திரும்பி இருக்கிறார். அவரையும், அவருடன், திரும்பியிருக்கும் உடன்பிறப்புகளையும் நான் வரவேற்கிறேன். திமுக எம்.ஜி.ஆரை வளர்த்தது. அவரும் கழகத்தை வளர்த்தார். கலைஞரைத் தலைவராக ஏற்றுக் கொண்டார். அப்படிப்பட்ட தாய்க்கழகத்திற்கு நீங்கள் எல்லாம் திரும்பி இருக்கிறீர்கள்.  எம்.ஜி.ஆர். உருவாக்கிய அ.தி.மு.க., யாருக்கோ அடிமை சேவகம் செய்யப்போனதால் தாய்க்கழகத்திற்குத் திரும்பி இருக்கிறீர்கள்.   சுயமரியாதையின் கோட்டையான அண்ணா அறிவாலயத்திற்கு வந்திருக்கிறீர்கள். அண்ணாவின் தம்பியாக - கலைஞரின் உடன்பிறப்பாக – உங்களை எல்லாம் வருக! வருக! என்று மீண்டும் வரவேற்கிறேன். ஓ.பி.எஸ். என்று சொன்னால், ஞாபகத்திற்கு வருகின்ற ஒரே சொல், “விசுவாசம்!” மறைந்த அம்மையார் ஜெயலலிதா அவர்கள், தான் அமர்ந்த முதலமைச்சர் இருக்கையில், நம்முடைய ஓ.பி.எஸ். அவர்களை இரண்டு முறை அமர வைத்தார். தன்னிடம் ஒப்படைத்த அரசாட்சியை, எந்தத் துரோகமும் இல்லாமல், திருப்பி ஒப்படைத்த நேர்மைக்குச் சொந்தக்காரர்தான் ஓ.பி.எஸ்.! அதனால்தான், அம்மையார் ஜெயலலிதா அவர்களே, சகோதரர் ஓ.பி.எஸ். அவர்களைப் பற்றி புகழ்ந்து பேசியிருக்கிறார். விசுவாசத்துக்கு ஒரு ஓ.பி.எஸ். என்றால், துரோகத்திற்கு அடையாளமாக இருப்பவர்தான் பழனிசாமி. கூவத்தூரில், அம்மையார் சசிகலா காலில் ஊர்ந்து, தவழ்ந்து சென்று முதலமைச்சராகிவிட்டு, அந்த அம்மையாரை நோக்கியே, “நீ எனக்குப் பதவி பெற்று தந்தாயா?” என்று ஒருமையில் கேட்டவர்தான் பழனிசாமி.  பழனிசாமியை பொறுத்தவரைக்கும், தன்னை காப்பாற்றிக் கொள்ள எது வேண்டுமானாலும் செய்வார். தன்னைக் காப்பாற்றிக் கொள்ள எம்.ஜி.ஆர். உருவாக்கி, ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட இயக்கத்தையே அடமானம் வைத்திருக்கிறார். மக்களுக்காக பார்த்துப் பார்த்து திட்டங்களைத் தீட்டி, நன்மைகள் செய்து, மக்களுக்கு கொடுத்தால், அது தி.மு.க. மக்களைப் பற்றிக் கவலப்படாமல், மக்களிடம் இருந்து எல்லாவற்றையும் பறித்தால், அது பா.ஜ.க.. இப்படி, யாருக்குமே நன்மை செய்யாத பா.ஜ.க.வா, அ.தி.மு.க.வுக்கு நன்மை செய்யப் போகிறது? அ.தி.மு.க.வின் இரத்தத்தைத்தான் உறிஞ்சி எடுக்கும். அதுதான் நடக்கப் போகிறது! இன்றைக்கு நிதிஷ்குமாருக்கு ஏற்பட்டிருக்கும் கதிதான், நாளைக்குப் பழனிசாமிக்கும். எனக்குக் கிடைத்த தகவல்படி, அ.தி.மு.க.வில் பழனிசாமிக்கு பதிலாக வேறு ஒருவரைப் பொதுச்செயலாளராக பா.ஜ.க. தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறது. பழனிசாமி அவர்களை இந்தத் தேர்தல் வரைக்கும்தான் பா.ஜ.க. வைத்திருக்கும். பிறகு, அவரையே தூக்கிவிடுவார்கள். அதுதான் நடக்கப் போகிறது.  எய்ம்ஸ் கட்டுவதற்கு தாமதம் மட்டுமல்ல, இதே மதுரையில், மெட்ரோ இரயிலும் வரவிடாமல் தடுக்கின்ற ஆட்சியாக ஒன்றிய பா.ஜ.க. அரசு இருக்கிறது.  2021 தேர்தலின்போது இருந்ததைவிட, நாம் இப்போது கூடுதலாக பலம் பெற்றிருக்கிறோம்.   தி.மு.க. கூட்டணி 200-க்கும் அதிகமான தொகுதிகளில் வென்று, மீண்டும் ஆட்சி அமைப்போம்! தி.மு.க.தான் வெற்றி பெறப் போகிறது என்று பா.ஜ.க.வே நினைக்கிறது. அதனால்தான், நம்முடைய பிரச்சார பீரங்கியாக இருந்த ஆளுநர் ரவி அவர்களை திடீர் என்று மாற்றிவிட்டார்கள். ஸ்டாலினுக்கு மறுபடியும் பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டுமே என்று விரக்தியில், அவர் கிளம்பிவிட்டார்.  இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்