11
Mar 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
மலிவு விலையில் 10 ருபாய்க்கு தயிர்சாதம், தக்காளி சாதம், வெஜிடபிள் பிரியாணி விற்பனை
BY NEWS TODAY
10 Mar 2026
0
பகிர்

10 ருபாய்க்கு தயிர்சாதம், தக்காளி சாதம், வெஜிடபிள் பிரியாணி விற்பனை துவக்கம்

மதுரை சரவணா கிச்சன் சார்பில்  


அதிமுக மருத்துவ அணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் Ex.MLA ஏற்பாட்டில் சரவணா மருத்துவமனை மற்றும் சூர்யா டிரஸ்ட் இணைந்து சரவணா கிச்சன் என்ற பெயரில் ஏழை மக்களுக்கான நடமாடும் மலிவு விலை உணவகத்தை துவக்கியுள்ளது. 

கடந்த ஜனவரி 19 முதல் காலை உணவாக 10 ரூபாய்க்கு தேநீருடன் 3 இட்லி விற்பனையை துவக்கியது. அதைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி 12ம் தேதி முதல் இரவு உணவாக 20 ரூபாய் மலிவு லிலையில் சிக்கன் மற்றும் முட்டைப் பிரியாணி விற்பனை செய்யப்பட்டது.  

இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ள நிலையில் மதிய வேளையிலும் மக்களுக்கு மலிவு விலை உணவு வழங்கும் சேவையை சரவணா கிச்சன் விரிவுபடுத்தி உள்ளது.

 கோ.புதூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மலிவு விலையில் 10 ரூபாய்க்கு தயிர்சாதம், தக்காளி சாதம் மற்றும் வெஜிடபிள் பிரியாணி ஆகியவை வழங்கும் திட்டத்தை அதிமுக மருத்துவ அணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் Ex.MLA துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அண்ணா தொழிற்சங்க முன்னாள் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ரமணி, வழக்கறிஞர் ராமசுப்பிரமணியன், முத்தானந்தன், அஜித்குமார், பாண்டிச்செல்வி, லியாகத் அலி, ஜாகிர் உசேன், விருமாண்டி, ஆகியோர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

கடந்த 50 நாட்களாக மக்களின் ஏகோபித்த வரவேற்பில் நடைபெற்று வரும் சரவணா கிச்சன் மலிவு விலை உணவகத்தில் காலை நேரத்தில் வழங்கப்படும் மலிவு விலை இட்லி தேநீர் திட்டத்தில் சுமார் 30,000 பேரும், மலிவு விலை இரவு உணவு பிரியாணி வழங்கும் திட்டத்தில் கடந்த 24 நாட்களில் 12,000 பேரும் ஆக இதுவரை சுமார் 42,000 பேர் பயன் அடைந்துள்ளனர். 

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்