நள்ளிரவில் அத்துமீறிய பாகிஸ்தான் டிரோன்கள்: சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்
BY NEWS TODAY
16 Jan 2026
0
பகிர்

ஜம்மு காஷ்மீரில் நள்ளிரவில் நுழைய முயன்ற பாகிஸ்தான் டிரோன்களை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் காஷ்மீரில் உள்ள பஹல்காமில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் ஏற்பட்டது. இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது. இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரின் சம்பா மாவட்டத்தின் ராம்நகர் செக்டார் சர்வதேச எல்லை அருகே உள்ள கேசோ மஹன்சன் கிராமத்திற்குள் பாகிஸ்தான் டிரோன்கள் நேற்று நள்ளிரவு நுழைய முயன்றன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதே போல பூஞ்ச் மாவட்ட டெக்வார் கிராமத்திலும்  டிரோன் பறந்தது. அதை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இதையடுத்து எல்லையில் பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.



காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த சில நாட்களில் மூன்றாவது முறையாக டிரோன்கள் மூலம் பாகிஸ்தான் ஊடுருவ முயன்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  


----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்