பாஜக தேசிய தலைவராக பொறுப்பேற்றார் நிதின் நபின்!
BY NEWS TODAY
20 Jan 2026
0
பகிர்

பாஜகவின்  தேசிய தலைவராக நிதின் நபின்,  பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் இன்று (ஜனவரி 20) பொறுப்பேற்றுக்கொண்டார். 



பாரதிய ஜனதா கட்சியின்(பாஜக) 11-வது தேசிய தலைவராக இருந்த  ஜே.பி. நட்டாவின் பதவிக்காலம் கடந்த 2023-ம் ஆண்டோடு நிறைவடைந்தது. ஆனாலும்,  நாடாளுமன்ற, சட்டப்பேரவை தேர்தல்கள் காரணமாக அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில், பாஜகவின் செயல் தலைவராக நிதின் நபின் கடந்த மாதம் நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து பாஜக தேசியத் தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், நிதின் நபின் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அவருக்காக பல்வேறு மாநில பாஜக சார்பில் 36 வேட்பு மனுக்களும், பாஜக தலைமை சார்பில் ஒரு மனுவில் தாக்கல் செய்யப்பட்டன. நிதின் நபினுக்கு ஆதரவாகவே அனைத்து மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.



இதையடுத்து போட்டியின்றி பாஜக தலைவராக நிதின் நபின் நேற்று தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக மூத்த தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட உயர் மட்டத் தலைவர்களின் ஆசியுடன், நிதின் நபின் பாஜகவின் தேசிய தலைவராக இன்று  பொறுபேற்றார்.



இளம் வயதிலேயே பாஜக தேசிய தலைவராக பொறுப்பேற்றுள்ள நிதின் நபினுக்கு 45 வயதாகிறது. இவரது பதவிக்காலம் 2029- ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை இருக்கும். தற்போது பிஹார் மாநில அமைச்சராக நிதின் நபின் உள்ளார். அந்த மாநிலத்தில் உள்ள பாங்கிபூர் தொகுதியில் 5 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 


----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்