16
Jan 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
டெல்லியில் இன்று பொங்கல் விழா: பிரதமர் மோடி பங்கேற்கிறார்!
BY NEWS TODAY
14 Jan 2026
0
பகிர்

டெல்லியில் உள்ள மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் மீன்வளத்துறையின் இணை அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் இன்று நடைபெறும் பொங்கல் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.



தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகையை மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் மீன்வளத்துறையின் இணை அமைச்சர் எல். முருகன் ஒவ்வொரு ஆண்டும் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் கொண்டாடி வருகிறார். இந்த ஆண்டிற்கான பொங்கல் விழா இன்று (ஜனவரி 14) நடைபெறுகிறது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றுகிறார். 



இவ்விழாவில் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களின் முக்கிய பிரதிநிதிகள், தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட மாநில நிர்வாகிகளும்ம் பங்கேற்கின்றனர். பிரதமரின் வருகையை முன்னிட்டு பல்வேறு கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



இந்த விழாவில் பங்கேற்பதற்காக நீதிபதிகள், பல உயர் அதிகாரிகள், பல்வேறு துறை வல்லுனர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.. உச்சநீதிமன்ற  நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.மகாதேவன், இந்திய அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணி, பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன், குஷ்பு, சரத்குமார், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார், நடன அமைப்பாளர் கலா உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். 


----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்