தமிழக மீனவர்கள் 7 பேர் கைது: இலங்கை கடற்படையின் அட்டூழியம்!
BY NEWS TODAY
21 Jan 2026
0
பகிர்

எல்லைதாண்டி மீன்பிடித்ததாக தமிழ்நாடு மீனவர்கள் 7 பேரை  இலங்கை கடற்படை கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த  மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லும் போது எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படை அவர்களை கைது செய்வதுடன் படகுகளையும் பறிமுதல் செய்து வருகிறது. அத்துடன் தமிழக, புதுச்சேரி மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கி கொள்ளையடிப்பதும் தொடர்கிறது.  இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது தொடர்கதையாகி உள்ளது.



இந்த நிலையில், மயிலாடுதுறை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 2 நாட்டுப்படகுகளில் 7 மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றனர். அவர்கள் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக அவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. அத்துடன் அவர்களை காரைநகர் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தமிழக மீனவர்கள் மத்தியில் அதிர்சசியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இலங்கை கடற்படை அத்துமீறி நடவடிக்கை எடுத்து மீனவர்களை கைது செய்து இருப்பதாகவும், எனவே அவர்களை விடுவிக்க வேண்டும் என்றும்  தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்