விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை: என்டிஏவில் இணைந்தார் டி.டி.வி.தினகரன்!
BY NEWS TODAY
21 Jan 2026
0
பகிர்

தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய உள்ளதாக அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.



தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன.  அந்த வகையில், அதிமுக-பாஜக கூட்டணி கட்சிகளின் முதல் பிரசார பொதுக்கூட்டம் மதுராந்தகத்தில் ஜனவரி 23-ம் தேதி நடக்கிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். இந்த பொதுக்கூட்டத்தில் தேசிய ஜனநாயக. கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பேச இருக்கிறார்கள்.  தற்போது அதிமுக.-பா.ஜ.க. கூட்டணியில் பாமக (அன்புமணி),  தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி இடம்பெற்றுள்ளன. 



இந்த நிலையில், சென்னை அடையாறில் அமமுக  மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று (ஜனவரி 21) நடைபெற்றது. இந்த கூட்டத்திற்குப் பிறகு அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், " தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய முடிவு செய்துள்ளோம். தமிழக மக்கள் விரும்புகிற,  நல்லாட்சியை தரும் தமிழ்நாட்டை உருவாக்க நாங்களும் உறுதுணையாக இருப்போம். விட்டுக் கொடுப்பவர்கள், கெட்டுப்போவதில்லை. எங்களுக்குள் இருப்பது பங்காளி சண்டை.  பிரிந்தவர்கள் ஒன்றிணைந்து அம்மா விரும்பிய ஆட்சியை தமிழகத்தில் உருவாக்குவோம். தேசிய ஜனநாயக கூட்டணி தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயலை சந்திக்க உள்ளேன். அதன் பின் விரிவாக மற்ற விஷயங்களைக் கூறுகிறேன்" என்றார்.


----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்