அவர் வருவாரா?: தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று கூடுகிறது
BY NEWS TODAY
20 Jan 2026
0
பகிர்

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் இன்று (ஜனவரி 20) தொடங்குகிறது.



தமிழ்நாடு  சட்டப்பேரவையின் நடப்பாண்டின் முதல் கூட்டம் இன்று தொடங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர், ஆளுநர் உரையுடன் தொடங்குவது மரபாக இருந்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் இன்று காலை 9.30 மணிக்குத் தொடங்குகிறது.



தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றுவார். ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கும் போது தமிழ்த் தாய் வாழ்த்துடன் தேசிய கீதத்தையும் பாட வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆளுநர் ரவி, தமது உரையை வாசிக்காமல் வெளிநடப்பு செய்து வருகிறார். இதனால் இன்றும் தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ரவி உரையாற்றுவாரா அல்லது வெளிநடப்பு செய்வாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.



அதன்பின் சபாநாயகர் தலைமையில் நடைபெறும் அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் சட்டப்பேரவை கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்த வேண்டும் என்பது குறித்து முடிவு செய்யப்பட உள்ளது. சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே இருக்கும் நிலையில், இந்த கூட்டத் தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.


----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்