ரஷ்யா அடுக்குமாடி குடியிருப்பு மீது டிரோன் மூலம் திடீர் தாக்குதல் !
BY NEWS TODAY
21 Jan 2026
0
பகிர்

ரஷ்யாவில் அடுக்குமாடி குடியிருப்பின் மீது டிரோன் மூலம் உக்ரைன் தாக்குதல் நடத்தியதில் 11 பேர் படுகாயமடைந்துள்ளனர்.



ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில், ரஷ்யாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஆதிகேயா மாகாணத்தில் உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. குடியிருப்பு ஒன்றின் மீது டிரோன் மோதி வெடித்தது- இதனால் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் தீப்பற்றிக் கொண்டது. இதில் 2 சிறுவர்கள் உள்பட 11 பேர் காயமடைந்ததாக ஆளுநர் முராத் கும்பிலோவ் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 20-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீப்பிடித்து எரிந்துள்ளன.



இந்த தாக்குதலின் போது பலத்த வெடிச்சத்தம் கேட்டதாக நேரில் பார்த்தவர்கள் விவரித்தனர். டிரோன் தாக்குதலில் 12 மாடி கொண்ட அடுக்குமாடி முற்றிலும் சிதைந்தது. தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது. இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டிரோன் தாக்குதல் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



உக்ரைன் தாக்குதல் தொடர்பாக ரஷ்யா பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ரஷ்யாவின் வான்பரப்பிற்குள் ஊடுருவ முயன்ற 53 உக்ரேன் டிரோன்களை ரஷ்யப் படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளன. இதில் ஆதிகேயா மாகாணத்தை ஒட்டியுள்ள கிராஸ்னோடர் பகுதியில் மட்டும் 7 டிரோன்கள் இடைமறிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், ஒரு டிரோன் குடியிருப்புப் பகுதியைத் தாக்கியது  என்று கூறப்பட்டுள்ளது.


----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்