அமெரிக்காவின் நடவடிக்கையை எதிர்த்தால் சுங்க வரி: டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை!
BY NEWS TODAY
17 Jan 2026
0
பகிர்

கிரீன்லாந்தை அமெரிக்கா கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு ஆதரவு அளிக்காத எதிர்ப்பு தெரிவிக்கும் நாடுகள் மீது சுங்க வரி விதிக்கப்படும் என்று டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.



டென்மார்க் அரசின் ஒரு பகுதியாக உள்ள, தன்னாட்சி பெற்ற பகுதியாக கிரீன்லாந்து செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், கிரீன்லாந்தை அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர அந்நாட்டின் அதிபர் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தி வருகிறார். டிரம்பின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.



கிரீன்லாந்தை அமெரிக்கா கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாது என்று டென்மார்க் உள்பட பல்வேறு ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசுகையில், " அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு கிரீன்லாந்து மிகவும் அவசியம். மேலும் , கிரீன்லாந்தை அமெரிக்கா கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு ஆதரவு அளிக்காத எதிர்ப்பு தெரிவிக்கும் நாடுகள் மீது சுங்க வரி விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று  தெரிவித்துள்ளார்.

 


----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்