11
Mar 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய போலீசுக்கு 339 மாதங்கள் சிறை தண்டனை
BY NEWS TODAY
05 Mar 2026
0
பகிர்


 திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பெண்ணை ஏமாற்றிய காவலருக்கு 28 ஆண்டுகள், மூன்று மாதம் சிறை தண்டனை மற்றும் 22 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து திருவாரூர் மகிளா நீதிமன்றம் உத்தரவு.


திருவாரூர் பவித்திரமாணிக்கம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (29). இவர் 2ம் நிலை காவலராக திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார்.


கடந்த 2021ம் ஆண்டு கொரோனா காலத்தில் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பாதுகாப்பு பணியிலிருந்த இவர், அங்கு பணியாற்றி வந்த பெண் ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி நெருங்கி பழகி வந்துள்ளார்.


பின்னர், திருமணத்துக்கு சதீஷ் மறுத்து விட்டாராம். இதுகுறித்த புகாரின் பேரில் திருவாரூர் மகளிர் காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு திருவாரூர் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி ஜி.சரத்ராஜ் தீர்ப்பளித்தார்.

 தீர்ப்பில் சதீஷூக்கு 28 வருடங்கள் 3 மாதம் சிறைத்தண்டனையும், ரூ.22 ஆயிரம் அபராதமும் விதித்து இதை 14 வருடம் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.


மேலும், அபராத தொகை மற்றும் அரசு சார்பில் ரூ.3 லட்சம் நிவாரணம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்கபட வேண்டுமெனவும் தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.



----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்