11
Mar 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
நடிகர் விஜய் மனைவி சங்கீதாவின் அடுத்த பரபரப்பு நீலாங்கரை வீட்டில் அனுமதிக்க கோரி.
BY NEWS TODAY
07 Mar 2026
0
பகிர்

நடிகர் விஜய் மனைவி சங்கீதாவின் அடுத்த பரபரப்பு நீலாங்கரை வீட்டில் அனுமதிக்க கோரி.

 செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல்


 தவெக தலைவர் நடிகர் விஜய் மனைவி சங்கீதா அவரை விட்டுப் பிரிந்து தனியாக லண்டனில் வசித்து வருகிறார். நிலையில் சில தினங்களுக்கு முன்பு திடீரென நடிகர் விஜய் ஒரு நடிகையுடன் குடும்பம் நடத்தி வருகிறார். எனவே தனக்கு விவாகரத்து வேண்டும் என செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

 விஜய் மனைவி வேறொரு நடிகையுடன் தொடர்பு என்று கூறி வழக்கு தாக்கல் தொடர்ந்த சில தினங்களிலேயே நடிகர் விஜய் பட்டு வேஷ்டி சகிதம் நடிகை திரிஷாவுடன் கல்பாத்தி அகோரம் வீட்டு திருமண விழாவில் ஜோடியாக கலந்து கொண்டனர். இந்த வீடியோ வைரலாகி பரபரப்புக்குள்ளாகியுள்ளது. 

 இந்தப் பரபரப்பு அடங்குவதற்கு உள்ளாகவே நடிகர் விஜயின் மனைவி சங்கீதா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வேறொரு மனு தாக்கல் செய்துள்ளார்.

 அதில், தான் லண்டனில் வசித்து வருவதாலும் சென்னை வரும் போது தங்குவதற்கு தனக்கு வீடு இல்லாததால் நீலாங்கரை வீட்டில் தங்க அனுமதிக்க வேண்டும். இது குறித்து கூறினால் வக்கீல்கள் மூலம் விஜய் தரப்பு என்னை மிரட்டுகிறார்கள். எனவே எனது விவாகரத்து வழக்கு முடியும் வரை சென்னை நீலாங்கரை வீட்டில் நான் தங்குவதற்கு அனுமதிக்க நடிகர் விஜய்க்கு உத்தரவிடக்கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.




----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்