11
Mar 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
100 வயது காந்தியவாதி கிருஷ்ணம்மாள்  ஆவணப்படம் வெளியிடப்பட்டது
BY NEWS TODAY
09 Mar 2026
0
பகிர்

காலமும், வரலாறும் தேடி அடைந்த காந்தியவாதி கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்

 ஆவணப்பட வெளியீட்டில் புகழாரம்


அறத்தின் வழியில் காந்திய வரலாற்றின் தொடர்ச்சியாக வாழுகிறவர் 100 வயது கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன். இப்போதும் ஓய்வின்றி, சமூகப் பணியில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பவர். அவரது சமூகப் பணியை அங்கீகரித்து, மத்திய அரசு பத்ம விபூஷன் விருது வழங்கி கௌரவம் செய்தது.

அவரது வாழ்வு குறித்து, ரவி சுப்பிரமணியன் இயக்கத்தில் கே.கே.வி. மீடியா வென்ச்சர்ஸ் தயாரிப்பில், 'நிலம் + நீதி = கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்' என்ற ஆவணப்படம் மதுரையில் திரையிடப்பட்டது.

அரவிந்த் கண் மருத்துவ ஆராய்ச்சி அறக்கட்டளையின் ஓய்வு பெற்ற இயக்குநர் பத்மஸ்ரீ நாச்சியார் ஆவணப்படத்தை வெளியிட, மனநல மருத்துவர் சி.ராம சுப்பிரமணியன் பெற்றுக் கொண்டார்.

மதுரை அரவிந்த் மருத்துவமனை, லைக்கோ அரங்கில் நடைபெற்ற நிகழ்வில், அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர், நெல்லை பாலு வரவேற்றார். ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநர் ராஜா கோவிந்தசாமி, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் அறங்காவலர் சண்முக சுந்தரம், மங்கையர்க்கரசி கல்விக் குழும சேர்மன் அசோக்குமார், காவல் துணை கண்காணிப்பாளர், லில்லி கிரேஸ், எழுத்தாளர் ஆத்மார்த்தி முன்னிலை வகித்து வாழ்த்திப் பேசினர். 

நிலம் இல்லாத ஏழைகளுக்கும் நிலம் கிடைக்கப் போராடி, வெற்றி கண்டு அதனைப் பெற்றுக் கொடுத்தவர். செங்கொடி இயக்க தொழிலாளர்களின் உரிமைக்காக வீரியமாகப் போராடியவர். வினோபா பாவே, குமரப்பா வழியில், சமூக முன்னேறத்திற்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டவர் கிருஷ்ணம்மாள்.

வினோபா பாவேவின் 'பூமிதான' இயக்கத்தில் பங்கு கொண்டு, நிலமற்றவர்களுக்கு நிலம் கிடைக்க 14 ஆண்டுகள் நாடு முழுதும், அவரோடு பயணப்பட்டவர். பல ஆயிரம் ஏக்கர் நிலங்களை மீட்டு, அவர்களுக்கு கொடுத்தவர் என அவர் குறித்த பெருமைகளைச் சொல்லி, புகழஞ்சலி செலுத்தினர்.

அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர், நெல்லை பாலு நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தார்.

ஆவணப்பட இயக்குனர் ரவி சுப்பிரமணியன் நன்றி கூறினார்.



----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்