தபால் ஓட்டில் முந்துகிறதா அதிமுக!!".
BY NEWS TODAY
22 Apr 2026
0
பகிர்

தபால் ஓட்டில் முந்துகிறது அதிமுக.

ஆளுங்கட்சிக்கு எதிராக அரசு ஊழியர்கள்.


தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற பொது தேர்தளுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. 

 இதற்கான தபால் ஓட்டுக்கள் பதிவு ஏற்கனவே நடைபெற்று முடிந்து விட்டது. 

 அரசு வருவாய்த்துறை, கல்வித்துறை, காவல்துறை என தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மற்றும் முதியவர்களுக்கான தபால் வாக்குப்பதிவு ஏற்கனவே நடைபெற்று முடிந்து விட்டது. 

 வழக்கமாக அரசு ஊழியர்களின் ஆதரவு திமுகவுக்கு அதிகமாக இருக்கும். அதனால் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளில் தபால் ஓட்டுக்கள் எண்ணி முடிந்ததும் திமுக முன்னிலை என்ற அறிவிப்பு காண முடியும்.

 ஆனால் இந்த முறை நமது கருத்துக்கணிப்பின்படி தபால் ஓட்டுக்கள் பெரும்பாலும் அதிமுகவுக்கு பதிவாகியுள்ளது என்பது தெரிய வந்துள்ளது.

 கல்வித்துறை, சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், வருவாய்த்துறை ஊழியர்கள் மற்றும் காவல் துறையினர் கடந்த கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தனர் பல போராட்டங்கள் நடத்தியும் அவர்களுக்கு விடிவு ஏற்படாததால் ஆளும் திமுக அரசு மீது அதிருப்தியில் இருந்தனர்.

 இதன் விளைவு தபால் ஓட்டில் பிரதிபலித்துள்ளது.


----------------------
ஆசிரியர் NEWS TODAY
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்