ஓட்டு போட எந்தெந்த ஆவணம் காண்பிக்க வேண்டும்.
BY NEWS TODAY
22 Apr 2026
0
பகிர்

ஓட்டு போட எந்தெந்த ஆவணம் காண்பிக்க வேண்டும்.

பூத் ஸ்லிப், வாக்காளர் அட்டை இல்லாவிட்டாலும்


 தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. 

 காலை 7 மணி முதல் மாலை 6:00 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

 வாக்காளர் பட்டியலில் உள்ள அனைவருக்கும் பூத் ஸ்லிப் வீடு வீடாக வழங்கப்பட்டு வருகிறது. வாக்குச்சாவடிக்கு ஓட்டு போட செல்லும்போது பூத் ஸ்லிப், வாக்காளர் அட்டை இல்லாவிட்டாலும் அதற்குப் பதிலாக 12 வகையான ஆவணங்களை எடுத்துச் செல்லலாம்.

 எவை எவை எடுத்துச் செல்ல வேண்டும் என்பது குறித்து புகைப்படத்தில் நாம் தெளிவாக குறிப்பிட்டுள்ளோம். 

 ஆதார் அட்டை, பான் கார்டு, பாஸ்போர்ட், புகைப்படத்துடன் கூடிய வங்கி கணக்கு புத்தகம், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அடையாள அட்டை, தொழிலாளர் நல அமைச்சகத்தால் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு அட்டை, ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு அட்டை, டிரைவிங் லைசன்ஸ் உட்பட 12 வகையான மாற்று ஆவணங்களை எடுத்துச் சென்று வாக்குப்பதிவு செய்யலாம்.


----------------------
ஆசிரியர் NEWS TODAY
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்