ஆஃப் பாயில் பிரியர்களுக்கு ஆபத்து - பறவைக் காய்ச்சல் பரவுவதால் அமைச்சர் அட்வைஸ்!
BY NEWS TODAY
10 Feb 2026
0
பகிர்

பறவைக் காய்ச்சல் பரவி வரும் நிலையில் ஆஃப் பாயில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று தமிழக  மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார்.



சென்னையில் நீலாங்கரை மற்றும் அடையாறு பகுதிகளில் ஏராளமான காகங்கள் கொத்துக்கொத்தாக இறந்து கிடந்தன. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அத்துடன் காகங்கள் இறக்கும் சம்பவம் தொடர்ந்து வருகிறது. ஒருவேளை, பறவைக் காய்ச்சல் காரணமாக இவ்வாறு காகங்கள் இறந்து வருகிறதோ என்ற சந்தேகம் மக்களிடையே இருந்து வந்தது. இதையடுத்து, இறந்த காகங்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரிசோதனைக்காகத் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது. இறந்த காகங்களை மத்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வு செய்ததில், ‘ஹெச் 5. என் 1’ என்ற பறவைக் காய்ச்சல் பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. எனவே, தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தும்படி, தலைமை செயலருக்கு மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது.



இந்த நிலையில், சென்னையில்  தமிழக  மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்  செய்தியாளர்களிடம் கூறுகையில், “பறவைக் காய்ச்சல் தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அந்த தகவல் கிடைத்ததும் காகங்கள் உள்ளிட்ட பறவை இனங்கள் திடீரென்று இறந்தால், அதனை பார்ப்பவர்கள் உடனடியாக ஆழமாக குழித் தோண்டி புதைக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், திடீரென்று உயிரிழக்கும் கோழிகளை சாப்பிட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோழி இறைச்சி சாப்பிடுபவர்கள் நன்றாக சமைத்து சாப்பிட வேண்டும். ஆஃப் பாயில் போன்றவற்றை எடுத்துக் கொள்ள வேண்டாம். தமிழகத்தில் மனிதர்களுக்கு பறவைக் காய்ச்சல் நோய்த் தொற்று இதுவரை ஏற்படவில்லை. மாவட்ட அளவில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது” என்றார். 


----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்