02
Mar 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
திருப்பதி லட்டு கலப்பட விவகாரத்தில் திடீர் திருப்பம் - அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு
BY NEWS TODAY
11 Feb 2026
0
பகிர்

திருப்பதி லட்டு கலப்பட விவகாரத்தில் நடந்த சட்டவிரோத பண பரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



ஆந்திராவில்  ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டு தயாரிக்க வினியோகிக்கப்பட்ட நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டு இருந்ததாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கடந்த 2024 செப்டம்பர் மாதம் பகிரங்க குற்றம் சாட்டினார். இதனால் உலகம் முழுவதும் பக்தர்களிடையே அதிர்ச்சி ஏற்பட்டது.



மேலும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் சுமார் ரூ.250 கோடி மதிப்புள்ள 60 லட்சம் கிலோ கலப்பட நெய் தேவஸ்தானத்துக்கு வினியோகிக்கப்பட்டதாக திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் பி.ஆர்.நாயுடு கூறினார். இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டைத் தொடர்ந்து, 2024 அக்டோபரில் வழக்கு குறித்து விசாரிக்க சிபிஐ சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது.  நெய் என்ற பெயரில் விநியோகிக்கப்பட்ட பொருள், ரசாயன முறையில் பதப்படுத்தப்பட்ட பாமாயில் மற்றும் இதர பொருட்கள் என்று சிறப்பு புலனாய்வு குழு கண்டுபிடித்தது



அதன்படி வழக்கை விசாரித்த சிபிஐ, ஜனவரி 23-ம் தேதி  குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்துள்ளது. அதில் நெய்யில் கலப்படம் இருந்தாலும் மாட்டுக் கொழுப்பு எதுவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. மேலும்  2019 முதல் 2024-ம் ஆண்டு வரை லட்டு பிரசாதம் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாட்டுக் கொழுப்பு அல்லது வேறு எந்த விலங்கு கொழுப்பும் இல்லை என்பதை இந்த அறிக்கை உறுதிப்படுத்தியது.  இதுதொடர்பாக  தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகையில், 9 தேவஸ்தான அதிகாரிகள், 5 பால்வள நிபுணர்கள் உள்பட 36 பேர் மீது அறிக்கையில் சிபிஐ குற்றம் சாட்டியது.



இந்த நிலையில், அமலாக்கத்துறையும் ஒரு வழக்குப்பதிவு செய்துள்ளது. திருப்பதி லட்டு கலப்பட விவகாரத்தில் நடந்த சட்டவிரோத பண பரிமாற்றம் குறித்தும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் சட்டவிரோதமாக திரட்டிய பணம் குறித்தும் விசாரிக்க இந்த வழக்கை பதிவு செய்துள்ளது. இந்த விசாரணைக்காக சிபிஐ பதிவு செய்த வழக்கு, ஆவணங்கள் மற்றும் குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறை ஆய்வு செய்து வருவதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. திருப்பதி லட்டு விவகாரத்தில்  ஹவாலா பரிமாற்றம் நடந்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்