02
Mar 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்- தாக்கல் செய்தார் தங்கம் தென்னரசு!
BY NEWS TODAY
17 Feb 2026
0
பகிர்

தமிழ்நாடு அரசின் 2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. மே மாதம் புதிய அரசு தேர்வு செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (பிப்ரவரி 17) தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசுகையில்,"  தமிழ்நாட்டில் வறுமையை ஒழிக்கும் இறுதிப் போரை தொடங்கியுள்ளோம். அதன் ஒரு பகுதியாக ஏற்றுமதியை பெருக்கி, பண வீக்கத்தைக் குறைத்து, தொழிலாளர் நலன் காக்கும் பெரும் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. 

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அதிக நிதி வழங்கப்பட்டுள்ளது.உணவு உற்பத்தியில் வரலாறு காணாத வளர்ச்சியைப் பெற்றுள்ளோம். செயற்கை நுண்ணணுறவு உள்ளிட்ட துறைகளில் இளைஞர்கள் வளர திட்டங்கள் தீட்டப்படும் வகையில் தமிழர் பெருமையைப் பறைசாற்றும் வகையில் பல அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. நாட்டிற்கே வழிகாட்டும் வரலாற்றுக் கடமையை நாம் செய்து வருகிறோம். இதன் மூலம் தமிழ்நாட்டில் வறுமையை ஒழிக்கும் இறுதிப் போரை தொடங்கியுள்ளோம் . 

திருக்குறளை பிற மொழிகளில் மொழிப்பெயர்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பிறமொழி ஆதிக்கத்தில் இருந்து தமிழைப் பாதுகாக்க தமிழக அரசு முனைப்புடன் செயல்படுகிறது. 2030- ம் ஆண்டுக்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்படும் என்ற இலக்குடன் தொடங்கப்பட்ட கலைஞர் கனவு இல்லத் திட்டத்தில் இதுவரை 1.71 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மேலும், 29,000 வீடுகள் கட்டுமானப் பணியில் இருக்கின்றன. 2001 வரை தமிழக அரசால் கட்டப்பட்ட 1.14 லட்சம் வீடுகள் ரூ. 969 கோடியில் புனரமைக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு தாக்கல் செய்திருக்கும் இடைக்கால பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.48,534 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

விடியல் பேருந்து திட்டத்தில் 888 கோடி முறை மகளிர் பயணம் செய்து பயனடைந்துள்ளனர். 6 லட்சம் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1.40 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. 19 தோழி விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. மகளிர் நலன் காக்கும் இத்தகையை திட்டங்களை பல மாநிலங்கள் பின்பற்ற தொடங்கி உள்ளன. மகப்பேறு இறப்பு விகிதம் மற்றும் சிசு இறப்பு விகிதம் தேசிய சாராசரியை விட தமிழ்நாட்டில் குறைவாக உள்ளது. பெண் ஓதுவார் நியமனம் நமது அரசின் மகத்தான சாதனையாகும். 

மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு வீடுகள் கட்டித் தரும் திட்டத்தில் 10,469 வீடுகள் கட்டுவதற்கு, ரூ.630 கோடி ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த திட்டத்தின்கீழ் இதுவரை 6,010 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ளவை கட்டப்பட்டு வருகின்றன. இல்லங்களின் மகளிரின் உழைப்பை அங்கீகரிக்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் நாடு முழுவதும் போற்றும் திட்டமாக உள்ளது. பிற மாநிலங்களும் பின்பற்றும் திட்டமாக உள்ளது. இந்த திட்டம் தடைபட்டுவிடக் கூடாது என்பதற்காக ஒரே நாளில் ஏறத்தாழ ரூ.6500 கோடி நிதியை தமிழகத்தின் ஏழை எளிய மக்களின் கரங்களில் தவழச் செய்துள்ளோம். அதிகாலையிலேயே வங்கிகளில் மகளிர் உரிமைத் தொகை வரவு வைக்கப்பட்டதால் தமிழ்நாடே இன்ப அதிர்ச்சியில் உறைந்துபோனது" என்று பேசினார்.

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்