02
Mar 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
தவெகவுடன் கூட்டணி? காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் பரபரப்பு பேட்டி
BY NEWS TODAY
17 Feb 2026
0
பகிர்

தவெகவுடன் கூட்டணி குறித்து தேசிய தலைமை முடிவு எடுக்கும் என காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார். 

சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், பிப்ரவரி 22-ம் தேதி திமுக சார்பில் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. அழைப்புக்கு நாங்கள் காத்திருக்கிறோம். கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் சார்பில் ஐவர் குழு ஏற்கெனவே நியமிக்கப்பட்டுள்ளது. அக்குழு மேலிடத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கும். பிறகு மேலிடம் முடிவுகளை எடுக்கும். அது தவிர கூட்டணி குறித்து யாரும் பேச மாட்டார்கள், திமுகவுடன் எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. 

தமிழ்நாடு மக்கள் எப்போதும் முற்போக்கு எண்ணம் உடையவர்கள். இந்தியா கூட்டணியின் எண்ணமும் தமிழ்நாடு மக்களின் எண்ணமும் ஒரே மாதிரியாக இருப்பதால் என்டிஏ கூட்டணியை மக்கள் நிராகரித்து விடுவார்கள். தவெகவுடன் கூட்டணி குறித்து தேசிய தலைமை தான் முடிவெடுக்கும். கூட்டணி பேச்சுவார்த்தை குழு அது பற்றி பேசும். 

ஆட்சியில் பங்கு என்பது குறித்து திமுக எங்களிடம் எந்த ஒரு பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. இது எங்கள் கூட்டணிக்கு உட்பட்ட விஷயம். பேச்சுவார்த்தை தொடங்கியபிறகு தான் நாங்கள் என்ன கேட்கிறோம், அதற்கு அவர்கள் என்ன பதில் சொல்கிறார்கள் என்பது முழுமையாக தெரியவரும். அதன்பிறகு ஊடகங்களுக்கு தெரிவிப்போம்” என்றார். 
 

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்