02
Mar 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
அதிமுகவில் இணைந்தார் அழகிரியின் தீவிர ஆதரவாளர் மன்னன்
BY NEWS TODAY
17 Feb 2026
0
பகிர்


முக அழகிரியின் தீவிர ஆதரவாளரும் முன்னாள் துணை மேயருமான மன்னன் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.  திமுகவில் அண்ணா தொழிற்சங்கத்தில் ஆரம்பித்து கட்சியின் முக்கிய பதவிகளை வகித்தவர் மன்னன்.. இவர் திமுக ஆட்சியின் போது மதுரை மாநகராட்சியின் துணை மேயராக பதவி வகித்தார். 

 ஆரம்பம் முதலே மு க அழகிரியின் தீவிரவா ஆதரவாளராக செயல்பட்டு வந்தார். திமுகவிலிருந்து அழகிரி நீக்கப்பட்ட பொது மன்னனும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார். தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டு மக்கள் பணியாற்ற பல்வேறு முறை கோரிக்கை விடுத்தார். முதல்வர் ஸ்டாலின் மதுரை வந்தபோது விமான நிலையம் அருகே தனியாக சந்தித்து மனு கொடுத்தார். 

 அதன் பிறகு சமீபத்தில் மதுரை வந்த முக அழகிரி சந்தித்து மன்னிப்பு கடிதம் கொடுத்து கட்சியின் மீண்டும் பணியாற்ற அனுமதி கேட்டார். 

 ஆனால் அழகிரி ஆதரவாளர்களை திமுகவில் சேர்ப்பதற்கான எந்தவித அறிகுறியும் தென்படாத நிலையில் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் தனது ஆதரவாளர்கள் 50 பேருடன் மன்னன் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

 அவரோடு திமுக பகுதி துணைச் செயலாளர் ஆக இருந்த ராஜசேகரன், மாநகர் மாவட்ட கலை இலக்கியப் பிரிவு துணை அமைப்பாளர் அன்பரசு இளங்கோவன், வார்டு துணை செயலாளர் சிவாஜி ரேவா ஹரி உட்பட பல்வேறு திமுக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மதியம் எடப்பாடியை சந்தித்து அதிமுகவில் இணைந்தனர். 

 அவர்களை அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் செல்லூர் ராஜு, மற்றும் மதுரை மாநகராட்சி மாமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சோலை ராஜா ஆகியோர் அழைத்துச் சென்றனர்.

 இது குறித்து மன்னன் கூறுகையில், "பலமுறை திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து தன்னை இணைத்து மக்கள் பணியில் செயல்பட கோரிக்க வைத்து என்னை அனுமதிக்கவில்லை.

 அடிமட்ட தொண்டனுக்கு உரிய மரியாதை திமுகவில் இல்லை ஆகையால் அதிமுகவில் இணைந்து மக்கள் பணி செய்ய உள்ளேன்" என்றார்.


 இதேபோல் முன்னாள் லாட்டரி அதிபர் மார்ட்டின் மனைவி லீமா ரோஸ் ஐ ஜே கே கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்தார்.

 இவர் பாரிவேந்தரின் ஐஜேகே கட்சியில் இணை பொது செயலாளராக பதவி வகித்தவர். 


----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்