02
Mar 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
'நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?'- மீண்டும் சீண்டிய மாணிக்கம் தாகூர் எம்.பி!
BY NEWS TODAY
18 Feb 2026
0
பகிர்

கூட்டணிக்கு எதிராக விமர்சனம் செய்து வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ள நிலையில், நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ என பாரதியின் கவிதை வரிகளை மாணிக்கம் தாகூர் எம்.பி மீண்டும் பதிவு செய்துள்ளார். 

திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் சில தலைவர்கள் அரசியலிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற கோஷத்தை முன்வைத்து கலகம் செய்து வருகின்றனர். பிரவீன் சக்கரவர்த்தி, மாணிக்கம் தாகூர் எம்.பி உள்ளிட்டோர் திமுகவிற்கு எதிராக தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக கட்சி தலைமையிடம் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை தாக்கல் செய்துள்ளார். 

இந்த நிலையில் மாநிலத் தலைவர்கள் உட்பட யாருக்கும் கூட்டணி கட்சிகள் குறித்து பொதுவெளியில் கருத்து தெரிவிக்க உரிமை கிடையாது என்றும், கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசக் கூடாது. கூட்டணி குறித்து தேசிய தலைமை எடுக்கும் முடிவே இறுதியானது என்றும் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் எச்சரித்திருந்தார். அத்துடன் மாணிக்கம் தாகூர் எம்.பி, பொதுவெளியில் கூட்டணி குறித்து பேசுவதற்கு செல்வப்பெருந்தகை கண்டம் தெரிவித்திருந்தார்.

இந்த சூழ்நிலையில் விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம்தாகூர் அச்சமில்லை, அச்சமில்லை என்று மகாகவி பாரதியின் பாடலை நேற்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இன்று(பிப்ரவரி 18) மீண்டும் பாரதி பாடலை தனது எக்ஸ் பக்கத்தில் மாணிக்கம் தாகூர் எம்.பி பதிவு செய்துள்ளார். அதில்,

" காலை வணக்கம்.
தேடிச்சோறு நிதம் தின்று பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித் துன்பம் மிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரைகூடிக் கிழப்பருவம் எய்தி கொடுங்கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போல நான்
வீழ்வேன் என்று நினைத்தாயோ?" என்று கூறப்பட்டுள்ளது. 

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்