02
Mar 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
எங்களை மீறி பேசுவதா? - மாணிக்கம் தாகூருக்கு செல்வப்பெருந்தகை எச்சரிக்கை
BY NEWS TODAY
18 Feb 2026
0
பகிர்

எங்களை மீறி யார் பேசுவதா என மாணிக்கம் தாகூர் எம்.பிக்கு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் செல்வப்பெருந்தகை எச்சரித்துள்ளார். 

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், " தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் ராகுல் காந்தியும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் இருக்கிறார்கள் என்பதை முன்வைத்து தேர்தலை எதிர்கொள்ள வேண்டும். வரவிருக்கும் தேர்தலில் 100 சதவீத வெற்றி பெற வேண்டும் என்பதை ஒரு இலக்காக வலியுறுத்தி இருக்கிறோம். கூட்டணி குறித்து யாராவது பேச வேண்டும் என்றால், அவர்கள் அகில இந்திய தலைமையிடமோ அல்லது மாநில தலைமையிடமோதான் பேச வேண்டும். அதை விடுத்து பொதுவெளியில் பேசுவது தவறு என்பதை அகில இந்திய பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் தெளிவுபடுத்தியுள்ளார். 

கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைக்கான ஐவர் குழுவில் நானும் இருக்கிறேன். அத்துடன் மாநிலத் தலைவராகவும் இருக்கிறேன். எங்களை மீறி யார் பேசுவது? ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு போன்ற கருத்துக்கள் கட்சி நிர்வாகிகளிடம் மட்டுமே பேசப்பட வேண்டியவை. மைக் முன்பு பேசினால் சீட் கிடைக்குமா, இல்லாவிட்டால் ஆட்சியில் தான் அதிகாரம் கிடைக்குமா? எங்கே பேச வேண்டுமோ அங்கேதான் பேச வேண்டும். இது போன்ற கருத்துகள், தனிநபர்களின் கருத்துகள்; கட்சியின் அதிகாரப்பூர்வ கருத்து அல்ல. சட்டத்திற்கு மேலானவர் யாரும் இல்லை என்பது போல, கட்சிக்கு மேலானவர் யாரும் கிடையாது. யாராவது தங்களை கட்சிக்கு மேலானவர்களாக நினைத்திருந்தால் அது ஒரு பிரம்மை; அகில இந்திய தலைமை என்ன சொல்கிறதோ அதைத்தான் அனைவரும் கடைபிடிப்போம் " என்றார். 

மாணிக்கம் தாகூர் எம்.பிக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டியளித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்