02
Mar 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
பரபரப்பு... எல்லை தாண்டியதாக தமிழக மீனவர்கள் 22 பேர் கைது:
BY NEWS TODAY
19 Feb 2026
0
பகிர்

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழகத்தைச் சேர்ந்த 22 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. 

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது தொடர்கதையாக உள்ளது. அத்துடன் மீனவர்களின் விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து இலங்கை அரசு அரசுடமையாக்கி வருகிறது. இதனால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம், மண்டபம் மீனவர்கள் 22 பேரை 4 படகுகளுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்களை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் தமிழக மீனவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்