02
Mar 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
திமுக கூட்டணியில் தேமுதிக - மு.க.ஸ்டாலினுடன் பிரேமலதா சந்திப்பு
BY NEWS TODAY
19 Feb 2026
0
பகிர்

தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளது. 

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. தேர்தல் அறிக்கை தயார் செய்யும் வேலையில் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டிருந்தாலும், கூட்டணிக்கான ஏற்பாட்டிலும் தீவிரமாக ஈடுபட்டிருந்தன. அதிமுக கூட்டணியில் சேரும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த தேமுதிக, தற்போது திமுக கூட்டணியில் இன்று (பிப்ரவரி 19) இணைந்துள்ளது. 

சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பொருளாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோர் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் சேகர்பாபு, திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் உடனிருந்தனர். வரும் சட்டமன்றத் தேர்தலில் 7 தொகுதிகளும்,, ஒரு மாநிலங்களவை உறுப்பினர் சீட்டும் கேட்க தேமுதிக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்